தமிழகம்

திருச்சியில் சரக்கு போக்குவரத்து மையம்: திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்டர் வெளியீடு

சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பொது வசதி மையம்

செய்திப்பிரிவு

சென்னை:​ திருச்​சி​யில் பல்​முனை சரக்கு போக்​கு​வரத்து மையம் அமைக்​க​வும், சிவ​காசி​யில் பட்​டாசு தொழிலுக்கு பொது வசதி மையம் அமைக்​க​வும் விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்து டிட்கோ வெளி​யிட்​டுள்ள டெண்​டர் அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்சி மாவட்​டத்​தில் பல்​முனை சரக்கு போக்​கு​வரத்து மையத்தை உரு​வாக்​கு​வதற்​கான விரி​வான சாத்​தி​யக்​கூறு அறிக்கை மற்​றும் திட்ட கட்​டமைப்பு வாய்ப்​பு​களைத் தயாரிக்​கும் பணி​களுக்​காக தகு​தி​யான ஆலோ​சனை நிறு​வனம் தேர்வு செய்​யப்பட உள்​ளது.

எனவே, ஆர்​வ​முள்ள ஆலோ​சனை நிறு​வனங்​கள், tntenders.gov.in மற்​றும் tidco.com ஆகிய இணை​யதளங்​களில் விண்​ணப்​பங்​களை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். இதுதொடர்​பான விளக்​கங்​களைப் பெறு​வதற்​கான டெண்​டருக்கு முந்​தைய ஆலோ​சனைக் கூட்​டம் அக்​.22-ம்தேதி மதி​யம் 3 மணிக்கு சென்னை எழும்​பூரில் உள்ள டிட்கோ அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது.

ஆலோ​சனை நிறு​வனங்​கள் தங்​கள் திட்ட முன்​மொழி​வு​களை நவ.12-ம் தேதி மாலை 3 மணிக்​குள் tntenders.gov.in இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்க வேண்​டும். தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு பெறப்​பட்ட தொழில்​நுட்ப முன்​மொழி​வு​கள் டிட்கோ அலு​வல​கத்​தில் திறக்​கப்​படும். திருச்சி மாவட்​டத்​தில் பல்​வேறு போக்​கு​வரத்து முறை​களை ஒருங்​கிணைத்து சரக்​கு​களைக் கையாளும் வகை​யில் பல்​முனை சரக்கு மையத்தை உரு​வாக்​கு​வதற்​கான பணி​களின் ஒரு பகு​தி​யாக இந்த ஆலோ​சனை நிறு​வனம் தேர்வு நடை​பெறுகிறது.

இதே​போல், விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் பட்​டாசு தொழிலுக்​கான பொது வசதி மையம் அமைப்​ப​தற்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரிப்​ப​தற்கு தகு​தி​யான ஆலோ​சனை நிறு​வனத்தை தேர்வு செய்​ய​வும் டிட்கோ அழைப்பு விடுத்​துள்​ளது.

இதற்​கான ஆவணங்​களை tntenders.gov.in மற்​றும் tidco.com ஆகிய இணை​யதளங்​களில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். இதற்​கான டெண்​டருக்கு முந்​தைய ஆலோ​சனைக் கூட்​டம் அக்​.23-ம் தேதி மதி​யம் 3 மணிக்கு எழும்​பூரில் உள்ள டிட்கோ அலு​வல​கத்​தில் நடை​பெறுகிறது.

ஆலோ​சனை நிறு​வனங்கள் தங்​கள் முன்​மொழி​வு​களை நவ.13-ம் தேதி மதி​யம் 3 மணிக்​குள் tntenders.gov.in இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தொழில்நுட்ப முன்மொழிவுகள் எழும்பூரில் உள்ள டிட்கோ அலுவலகத்தில் திறக்கப்படும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT