தமிழகம்

ஆம்னி பேருந்து மோதி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் நான்கு வழிச்​சாலை​யில் ஆம்னி பேருந்து மோதி​ய​தில் ஒரே பள்​ளி​யில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

விருதுநகர் மாவடடம் சிவ​காசி மேலத்​தெரு​வைச் சேர்ந்தவர்கள்லிங்கம் மகன் கோகுல் (17). அவரது நண்​பர்​கள், மேலரத வீதி​யைச் சேர்ந்த சீனி​வாசன் மகன் பிரசன்னா (17), செந்​தில்​கு​மார் மகன் யுவ​ராஜ் (17). இவர்​கள் மூவரும் ஒரே பள்​ளி​யில் பிளஸ் 2 படித்​தனர்.

          

இந்நிலையில் நேற்று முன்​தினம் இரவு 3 பேரும் ஒரே பைக்​கில் சாத்​தூரிலிருந்து கோவில்​பட்டி நோக்​கிச் சென்​றனர். சாத்​தூர் நான்கு வழிச் சாலை​யில் எதிர்திசை​யில் சென்​ற​போது, எதிரே கன்​னி​யாகுமரியி​லிருந்து சென்னை நோக்​கிச் சென்ற ஆம்னி பேருந்து பைக் மீது மோதி​யது.

இந்த விபத்​தில் யுவ​ராஜ், பிரசன்னா ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். கோகுல் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தகவலறிந்த சாத்​தூர் தாலுகா போலீ​ஸார் அங்கு சென்று உடல்களை மீட்டு பரிசோதனைக்​காக சாத்​தூர் அரசு மருத்​து​வமனைக்கு அனுப்​பிவைத்​தனர். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்​டுநர் ஆம்​ஸ்ட்​ராங் மீது வழக்​குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT