தமிழகம்

உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 3 பேர் பதவியேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் கூடு​தல் நீதிப​தி​களாக பணியாற்றி வந்த 3 நீதிப​தி​கள், நிரந்தர நீதிப​தி​களாக நேற்று பதவியேற்​றுக் கொண்​டனர்.

சென்னை உயர் நீதி​மன்றத்​தில் கூடு​தல் நீதிப​தி​களாக பணி​யாற்றி வந்த நீதிப​தி​கள் ஆர்​.பூர்​ணி​மா, எம்​.ஜோ​தி​ராமன், ஏ.டி.மரியா க்ளேட் ஆகியோரை நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்க உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் பரிந்​துரை செய்​தது. இதை ஏற்​றுக்​கொண்ட குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, அவர்​களை நிரந்தர நீதிப​தி​களாக நியமித்து உத்​தர​விட்​டிருந்​தார்.

அதன்​படி, இவர்​கள் 3 பேருக்​கும் நிரந்தர நீதிப​தி​களாக சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி நேற்று பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். மூவரும் உறு​தி​மொழி எடுத்​து, உயர் நீதி​மன்​றத்​தின் நிரந்தர நீதிப​தி​களாக பதவி​யேற்றனர்​.

          
SCROLL FOR NEXT