பார்த்திபன் , எஸ். நித்திஷ், கே.நித்திஷ்

 
தமிழகம்

ராணிப்பேட்டை சிப்காட் அருகே மணியம்பட்டு ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ​​ராணிப்​பேட்​டை மாவட்​டம்​ சிப்​காட்​ அடுத்​த மணி​யம்​பட்​டு ஏரி​யில்​ 3 சிறு​வர்​கள்​ நீரில்​ மூழ்​கி உயி​ரிழந்​தனர்​. ராணிப்​பேட்​டை மாவட்​டம்​ சிப்​காட்​ திருவிநகர்​ பகு​தி​யைச்​ சேர்ந்​தவர்​ செல்​வம்​.

இவரது மகன்​ பார்த்​திபன்​ (13). இவர்​, அதே பகு​தி​யில்​ உள்​ள அரசு நிதி​யுத​வி பள்​ளி​யில்​ 7-ம்​ வகுப்​பு படித்​து வந்​தார்​. இதே​போல்​, அதே பகு​தி​யைச்​ சேர்ந்​த சரவணன்​ ​ மகன்​ எஸ்​.நித்​திஷ் (14).

          

இவர்​, சிப்​காட்​டில் உள்​ள தனி​யார்​ பள்​ளி​யில்​ 8-ம்​ வகுப்​பும்​, கமலக்​கண்​ணன்​ என்​பவரின்​ மகன்​ கே.நித்​திஷ் (13), சிப்​காட்​ தனி​யார்​ பள்​ளி​யில்​ 6-ம்​ வகுப்​பும்​ படித்​து வந்​தனர்​.

ஒரே பகு​தி​யைச்​ சேர்ந்​த 3 சிறு​வர்​களும்​ நேற்​று காலை சிப்​காட்​ அடுத்​த மணி​யம்​பட்​டு ஏரி அரு​கே விளை​யாடி கொண்​டிருந்​த​போது, எதிர்​பா​ராத ​வித​மாக ஒரு சிறு​வன்​ ஏரி​யில்​ தவறி விழுந்​து நீரில்​ மூழ்​கி​யுள்​ளார்​. அவரை காப்​பாற்​ற முயன்​ற மற்​ற 2 சிறு​வர்​களும்​ நிரில்​ மூழ்​கினர்​.

சிறு​வர்​களின்​ அலறல் சத்​தம்​ கேட்​டு ஓடிவந்த அக்​கம்​ பக்​கத்​தினர்​ 3 பேரை​யும்​ மீட்​டு அரு​கில்​ உள்​ள தனி​யார்​ மருத்​து​வ​மனை​யில்​ சேர்த்​தனர்​. அங்​கு அவர்களை பரிசோதனை செய்​த மருத்​து​வர்​கள்​ 3 பேரும்​ ஏற்​கெனவே உயி​ரிழந்​து விட்​ட​தாகத் தெரி​வித்​தனர்​.

இதுகுறித்​து தகவலறிந்​து வந்​த சிப்​காட்​ போலீ​ஸார்​ சிறு​வர்​களின்​ உடல்​களை மீட்​டு பரிசோதனைக்​காக வாலாஜா அரசு மருத்​து​வ​மனைக்​கு அனுப்​பி வைத்​தனர்​. இது குறித்​து சிப்​காட்​ போலீ​ஸார்​ வழக்​குப்​ப​திவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT