தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ராட்சத பளுதூக்கி மூலம் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பணி நடைபெற்றது.

 
தமிழகம்

தூத்துக்குடி வஉசி துறைமுகம்: ஒரேநாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்​துக்​குடி வஉசி துறை​முகம் ஒரே​நாளில் 2.17 லட்​சம் டன் சரக்​கு​களை கையாண்டு புதிய சாதனை படைத்​துள்​ளது.

இதுதொடர்பாக, வஉசி துறை​முக ஆணைய தலை​வர் சுசாந்​தகு​மார் புரோகித் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: தூத்​துக்​குடி வஉசி துறை​முக ஆணை​யம் கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17,332 மெட்​ரிக் டன் சரக்கு​களை கையாண்டு புதிய சாதனையை படைத்​துள்​ளது. இதற்கு முன்பு கையாண்ட 2 லட்சத்து 16,631 மெட்​ரிக் டன் என்ற சாதனை முறியடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில், நிலக்​கரி 62,466 டன், அனல்​மின் நிலக்​கரி 49,067 டன், சுண்​ணாம்​புக்​ கல் 20,671 டன், கந்தக அமிலம் 10,188 டன், பாமா​யில் 5,400 டன், சர்க்​கரை 1,771 டன், பொது சரக்​கு​கள் 774 டன், காற்​றாலை இறக்​கைகள் 68 டன் மற்​றும் 66,927 டன் சரக்​குப் பெட்டக சரக்​குகள் கையாளப்​பட்​டுள்​ளன. கடந்த 2026 ஆகஸ்ட் மாதத்​தில் 35.35 லட்​சம் டன் சரக்​கு​களைக் கையாண்​டுள்​ளது. இது, ஆகஸ்ட் 2025 மாதத்​தில் கையாளப்​பட்ட 32.33 லட்​சம் டன்​னுடன் ஒப்​பிடு​கை​யில், 9.36 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

ஏப்​ரல் முதல் ஆகஸ்ட் வரையி​லான கால​கட்​டத்​தில், துறை​முகம் மொத்​த​மாக 18.27 மில்​லியன் டன் சரக்​கு​களைக் கையாண்​டுள்​ளது. முந்​தைய ஆண்​டுடன் ஒப்​பிடு​கை​யில், இது 2.10 சதவீத வளர்ச்​சி​யாகும். துறை​முகத்​தில் உள்ள உயர் திறன் கொண்ட நகரும் பளுதூக்​கி​களின் பயன்​பாடு, அதிக அளவி​லான சரக்​கு​களை கையாள உதவி​யுள்​ளது.

மேலும், எதிர்​கால வளர்ச்​சிக்கு உறு​துணை​யாக சரக்கு தளம்-7 நவீன சரக்கு பெட்டக முனைய​மாக மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. சரக்கு தளம் 10 உரு​வாக்​குதல், வடக்கு சரக்கு தளம்-3 இயந்​திரமய​மாக்​கல் போன்ற பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. சுங்க கட்​டுப்​பாட்டு பகுதி கூடு​தலாக, 40 ஏக்​கர் பரப்​பில் விரி​வாக்​கப்​பட்டு வரு​கிறது.

வஉசி துறை​முகம் இந்த சாதனையை எட்​டு​வ​தில் ஒருங்​கிணைந்த முயற்​சிகள் பாராட்​டுக்​குரியது. வரவிருக்​கும் உள்​கட்​டமைப்பு வசதி​கள் நிறைவடைந்​ததும், துறை​முகத்​தின் சரக்​குக் கையாளும் திறன் மேலும் அதி​கரித்​து, கிழக்​குக் கடற்​கரை​யின் முக்​கிய கடல்​சார் நுழை​வாயி​லாக வலுப்​பெறும். பிராந்​திய பொருளா​தா​ர வளர்​ச்​சிக்​கு குறிப்​பிடத்​தக்​க பங்​களிப்​பை துறை​முகம்​ வழங்​கும்.இவ்​​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT