தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

செய்திப்பிரிவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றாதது தொடர்​பான நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கில், உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்​துள்ள உத்​தரவுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் ஆதரவும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர். இது​தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆதரவு

பிரதமர் மோடி: எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று தமிழ், ஆங்கிலம், இந்தியில் பதிவிட்டுள்ளார்.

முன்​னாள் மத்​திய அமைச்​சர் எல்.முருகன்: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த முருக பக்​தர்​களின் நம்​பிக்​கைக்கு கிடைத்​துள்ள முக்​கிய​மான வெற்​றி​யாக இதை பார்க்​கிறேன்.

உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை மதிக்​காமல் செயல்​பட்ட தமிழக அரசின் அணுகுமுறைக்கு முற்​றுப்​புள்ளி வைத்​திருக்​கிறது நீதி​மன்​றம். இனிவரும் காலங்​களிலா​வது, இந்து விரோத போக்​கையும், மத நம்​பிக்​கைகளில் தலை​யிடும் அணுகுமுறையையும் கைவிட்டு அனைத்து மக்​களுக்​கும் சமமான ஆட்​சி​யைத் தமிழக அரசு வழங்க வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன்: கோடான கோடி முருக பக்​தர்​களின் எண்​ணம் உச்ச நீதி​மன்​றத்​தில் பிரதிபலித்​திருப்​பது மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது. இந்து விரோத சக்​தி​களின் சூழ்ச்​சிகளை சூரசம்​ஹாரம் செய்து குன்​றத்தை மீண்​டும் வென்​றான் முருகன். குன்​றம் எப்​போதும் குமரனுக்கே.

வீ த லீடர்ஸ் தலை​வர் அண்​ணா​மலை: நீதி​மன்​றத்​தின் உத்​தரவு என்​பது அரசுடன் பேச்சு​வார்த்தை நடத்​து​வதற்​கான அழைப்​பல்ல, அது அரசு, அரசு அதி​காரி​கள் மற்​றும் சட்​டத்​தின் கீழ் செயல்​படும் அனைத்து அமைப்​பு​களை​யும் கட்​டுப்​படுத்​தும் உத்​தரவு. ஆட்​சி​யாளர்​களுக்கு பிடித்​திருக்​கிறதா, இல்லையா என்​பது முக்​கியமல்ல. நாட்​டின் சட்​டமும் நீதி​மன்​றத்​தின் உத்​தரவுமே இறுதி​யானவை. இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, நீதி​மன்​றத்​தின் உத்​தரவுக்கு மதிப்​பளிக்க வேண்​டும்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​சமுத்து: உச்ச நீதி​மன்ற தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்​சி​யையும், வரவேற்​பையும் அளிக்​கிறது. நீதி​மன்ற உத்​தரவு​களை மதித்து நடைமுறைப்​படுத்​து​வது ஓர் அரசின் அடிப்​படை கடமை. தமிழக அரசு கடந்த கால அணுகுமுறைகளில் இருந்து பாடம் கற்று, இம்​முறை​யாவது எவ்​வித தடங்​கலுமின்றி உச்ச நீதி​மன்ற உத்​தரவை முழு​மையாக நடைமுறைப்​படுத்த வேண்​டும்.

இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்வரா சி. சுப்​பிரமணி​யம்: முதல்​வர் விஜய்​தான் மாநிலத்​தின் இந்த தலைகுனிவுக்​குக் காரணம். மைனாரிட்டி ஆட்​சியை தக்க வைத்​துக் கொள்ள, கூட்​டணி கட்​சிகளின் கெட்ட எண்​ணத்​துக்​குத் தமிழகத்​தின் மானத்தை விற்​று​விட்​டார். அதை மறைக்க எத்​தனை பொய்​கள், எத்​தனை நாடகங்​கள். அவரது முகத்​திரையை உச்ச நீதி​மன்​றம் கிழித்து தொங்​க​விட்​டுள்​ளது. இந்த வெற்​றியை கொண்​டாட அனைத்து கோயில்​களி​லும் முருக பக்​தர்​கள் தீபம் ஏற்​று​வோம்.

தமிழ்​நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலை​வர் ஆர்​ஆர்.கோபால்ஜி: திருப்​பரங்​குன்​றம், முருகன் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​துாணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்ற இந்​துக்​களின் நீண்ட நெடிய போராட்​டத்​தில் இன்று (நேற்று) மிக முக்​கிய​மான மைல் கல். அரசி​யல் சக்​தி​களும், அதி​கார வர்க்​கமும் இந்​துக்​களுக்கு எதிராக நின்​றாலும், இந்​துக்​களுக்கு அரசி​யல் சாசனம் வழங்​கி​யிருக்​கும் உரிமையை நிலைநாட்​டிய உச்ச நீதி​மன்ற உத்​தரவை வரவேற்​கிறோம்.

எதிர்ப்பு

திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின்: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட்​டிருக்​கிறது உச்ச நீதி​மன்​றம். நிர்​வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதி​மன்​றத்​தில் வலிமையான வாதங்​களை வைக்​காமல் தமிழகத்​துக்கு அவ​மானத்​தைத் தேடிக் கொடுத்​து​விட்​டது.

திருப்​பரங்​குன்​றத்​தில் காலம் காலமாகப் பின்​பற்​றப்​பட்டு வந்த வழிபாட்டு மரபு​களை​யும், வழக்​கங்​களை​யும் காப்​பாற்​றியது திமுக அரசு. மதநல்​லிணக்​கத்​தையும், அமைதி​யையும், மாநில உரிமையையும் நிலைநாட்​டியது திமுக அரசு. இன்று மொத்​த​மாகத் தன் திறமையின்​மையால், விளம்​பர வெறி​யால், கோழைத்​தனத்​தால் கோட்டை விட்​டுள்​ளது தவெக அரசு. இத்​தனைக்​குப் பிறகும் கூட முதல்​வர் விஜய் வாயைத் திறக்க மறுப்​பது தமிழகத்​துக்​குச் செய்​யும் வரலாற்​றுத் துரோகம்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: உச்ச நீதி​மன்​றம் தமிழக அரசின் சீராய்வு மனுவை ஒருபொருட்​டாகவே எடுத்து கொள்​ளாமல் நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​குக்கு முன்​னுரிமை கொடுத்​தது ஏன்? கார்த்​திகை திருநாளன்று ஏற்ற வேண்​டிய தீபத்தை தொடர்​பில்​லாத ஒரு நாளில் ஏற்ற ஆணை​யிடுவது உச்ச நீதி​மன்​றத்​தின் அதி​காரவலிமையைக் காட்​டும் ஈகோவாகும். மாநில அரசின் உரிமை​களை நசுக்​கும் உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த மேலாதிக்​கப் போக்கு பேரச்​சத்தை அளிக்​கிறது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: திருப்​பரங்​குன்​றம் விவகாரத்​தில் மதவெறி அமைப்​பு​கள் ஏற்​கெனவே மக்​கள் மத்​தி​யில் வெறியூட்​டும் முயற்​சிகளை மேற்​கொண்டு வரும் நிலை​யில் மலை​யின் மீது எல்​லோரும் தீபம் ஏற்​றலாம் என்று உச்ச நீதி​மன்​றம் கூறி​யிருப்​பது பதற்​றத்தை உரு​வாக்க கூடிய​தாகும். மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசை புறந்​தள்ளி வழங்​கப்​பட்​டுள்ள இந்த உத்​தரவு தவறான முன்​னுதா​ரண​மாக வரலாற்​றில் நிற்​கப் போகிறது.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: உச்ச நீதி​மன்ற தீர்ப்பு தமிழகத்​தின் அமைதி நிலை மீது நடத்​தும் நேரடி தாக்​குலாகும். திருப்​பரங்​குன்​றம் மலை மீது தர்​கா​வுக்கு சொந்​த​மான இடம், முருகன் கோயிலுக்​கான இடம் என எல்லை பிரித்து பேசுவது, மதத்​தின் பெயரால் அரசி​யல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு துணை போகும் வாத​மாகும். இத்​தீர்ப்பு படுமோச​மான விளைவு​களை ஏற்​படுத்​தும்.

மனிதநேய மக்​கள் கட்​சித் தலை​வர் ஜவாஹிருல்லா: திருப்​பரங்​குன்​றம் வழக்கு உத்​தரவு மாநில அரசின் நிர்​வாக வரம்பு மீது தொடுக்​கப்​பட்ட தாக்​குதலாகும். இந்த விவகாரத்​தைத் தங்​களின் அரசி​யல் நோக்​கங்​களுக்​காக பயன்​படுத்தி கொள்ள முயலும் மதவாத சக்​தி​களின் செயல்​பாடுகளுக்கு உச்ச நீதி​மன்​றம் துணை போயிருப்​பது வேதனைக்​குரியது.

எஸ்டி​பிஐ கட்​சி​யின் மாநிலப் பொறுப்​புத் தலை​வர் அச.உமர் பாரூக்: உச்ச நீதி​மன்ற உத்​தரவு மதச்​சார்​பின்மை, அரசி​யலமைப்பு சட்​டத்​தின் மாண்​பு​கள், மக்​களின் மத உரிமை​கள் என பல்​வேறு அடிப்​படை கோட்​பாடுகளை கேள்​விக்கு உள்​ளாக்​கி​யுள்​ளது. மாநில உரிமை​களை​யும் கருத்​தில் கொள்​ளாமல் கோயில் நிர்​வாகத்தை கலைப்​ப​தும், மத்​திய படையைக் குவிப்பதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.

மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு தெரிவித்துள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டுள்ள புதிய தீர்ப்பு இந்திய நீதித்துறையின் மீது கடும் சந்தேகங்கள், வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT