தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபி உட்பட 13 பேருக்கு நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திருப்​பரங்​குன்​றம் மலை தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றாமல், உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவு மீறப்​பட்​டது. இது​தொடர்​பான நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கு​களை நீதிபதி அர​விந்த் குமார் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்து கடும் உத்​தரவு​களைப் பிறப்​பித்​தது.

நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில் கூறிய​தாவது: இந்த விவகாரத்​தில் நடை​பெற்ற தொடர் நிகழ்​வு​களைப் பார்க்​கும் போது, நிர்​வாக அதி​காரி​கள் தங்​களது அரசி​யல் மேலிடத்​தின் கட்​டளைகளின்​படி செயல்​பட்​டிருப்​ப​தாகத் தெரி​கிறது.

எனவே, தமிழ்​நாடு தலை​மைச் செய​லா​ளர், அதி​காரி​களுக்கு இடையே பரிமாறப்​பட்ட மின்​னஞ்​சல்​கள், தொலைபேசி அழைப்​பு​கள், குறுஞ்​செய்​தி​கள் உள்​ளிட்ட தகவல் பரிமாற்​றங்​களின் முழு​மையான விவரங்​களை​யும் அதற்​கான ஆவணங்​களை​யும் பிர​மாணப் பத்​திர​மாகத் தாக்​கல் செய்ய வேண்​டும். அடுத்த விசா​ரணை​யின் போது நேரில் ஆஜராக வேண்​டும். அதுபோல தமிழக காவல் துறை டிஜி​பியும் நேரில் ஆஜராக வேண்​டும்.

மேலும், தமிழக தலை​மைச் செய​லா​ளர், டிஜிபி, மதுரை மாவட்ட ஆட்சி​யர், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், இந்து சமய அறநிலை​யத் துறை துணை ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர், கோயில் அறங்​காவலர்​கள் உள்​ளிட்​டோருக்கு எதிராக நீதி​மன்ற அவ​மதிப்​புக்​கான முகாந்​திரம் உள்​ளது. எனவே ஏன் அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கக் கூடாது என்​பது தொடர்​பாக விளக்​கம் அளிக்க வேண்​டும்.

அதன்​படி, சம்​பந்​தப்​பட்ட நபர்​களுக்கு இன்​றைய உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்ட நாளி​லிருந்து 3 நாட்​களுக்​குள் நோட்​டீஸ் வழங்க வேண்​டும். நோட்​டீஸ் பெற்ற நாளி​லிருந்து அதி​கபட்​ச​மாக 10 நாட்​களுக்​குள் பதில் பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT