தமிழகம்

நீட் தேர்வை கைவிடவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வை முற்​றாகக் கைவிட வேண்​டும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​ அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: இளநிலை மருத்​து​வக் கல்விக்​கான (எம்​பிபிஎஸ்) நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே 3-ம் நடை​பெற்​றது.

ஆனால் அந்த தேர்​வுக்​கான வினாத்​தாள்​கள் தேர்​வுக்கு முன்​னரே கசிந்​தது. அந்​தத் தேர்வு செல்​லாதென கடந்த மே 13 அன்று தேசி​யத் தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது. அதனையடுத்து அதே தேர்வு ஜூன் 21 அன்று மீண்​டும் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நீட் தேர்வே வேண்​டா​மென தொடக்​கத்​திலிருந்தே விசிக வலி​யுறுத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இதனைக் கண்​டித்​தும், நீட் தேர்வு முறையை முற்​றாகக் கைவிட வேண்டுமென வலி​யுறுத்​தி​யும் தமிழகம் தழு​விய அளவில் தி.க. ஒருங்​கிணைக்​கும் ஆர்ப்​பாட்​டங்​களில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யும் பங்​கேற்​கிறது.

சென்​னை​யில் விசிக சார்​பில் நான் கலந்​து​கொள்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT