திருமாவளவன்

 
தமிழகம்

காவிரி விவகாரத்தில் வறட்டு பிடிவாதம் காட்டக் கூடாது: அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்சி: ​கா​விரி விவ​காரம் தொடர்​பாக ஆலோ​சிக்க தமிழக அரசு வறட்டு பிடி​வாதம் காட்​டா​மல், அனைத்து கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​னார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிதி அமைச்​சர் மரிய​வில்​சன் பட்​ஜெட் தாக்​கல் செய்​யும்​போது ஆவணங்​களு​டன் ஜெப​மாலை​யை​யும் எடுத்து வந்​தது, அவரது தனிப்​பட்ட நம்​பிக்​கை.

அந்த நம்​பிக்​கையை அரசமைப்புச் சட்​டம் அங்​கீகரிக்​கிறது. மதச்​சார்​பின்​மையை வலி​யுறுத்​தும் அரசமைப்பு சட்​டம் தான், மத நம்​பிக்​கை​யை​யும் அங்​கீகரிக்​கிறது. அரசமைப்பு சட்​டத்​தில் உள்ள இந்த முரண்​பாட்டை பெரி​யார் விமர்​சனம் செய்​துள்​ளார். ஆனால் அம்​பேத்​கர், பன்​மைத்​து​வத்தை போற்ற இது அவசி​யம் என்​கிற நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக இருந்​தார். இன்​றைய பட்​ஜெட் பற்​றாக்​குறை பட்​ஜெட்​டாகத் தான் இருக்​கும்.

ஆட்சி பொறுப்​பேற்ற 2 மாதங்​களில் பற்​றாக்​குறையை சரி செய்ய முடி​யாது. உதயநிதி ஸ்டா​லின் விவ​காரத்தை தொடர் விவாதத்​துக்கு உட்​படுத்த தேவை​யில்​லை. அது நேற்​றோடு முடிந்​து​விட்டது. காவிரி விவ​காரத்​தில் தமிழகத்​தில் உள்ள அனைத்து கட்​சிகளும் ஒருங்​கிணைந்து செயல்​படு​வது இன்​றைய தேவை. மேகே​தாட்டு அணையை கட்​டியே தீரு​வோம் என கர்​நாடகா தெரிவிக்​கிறது.

எனவே, கர்​நாடகா அரசி​யல்​வா​தி​களின் அரசி​யலை அம்பலப்​படுத்த காவிரி விவ​காரத்தில் தமிழக அரசு கவுர​வம் பார்த்து வறட்டு பிடிவாதம் பிடிக்க வேண்​டிய​தில்​லை. உடனடி​யாக அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்​டி எதிர்க்​கட்​சிகளின் கருத்​துகளை கேட்க வேண்​டும். தமிழர்​களின் பிரச்​சினை​களை முன்​னிறுத்த வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT