தமிழகம்

​விசிக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

காட்டுமன்னார்கோவிலில் திருமா போட்டி

செய்திப்பிரிவு

திமுக கூட்​ட​ணி​யில் இடம் பெற்​றுள்ள விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, எஸ்​டிபிஐ கட்​சிகள் போட்​டி​யிடும் தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். காட்​டுமன்​னார்கோவில் தொகு​தி​யில் விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் போட்​டி​யிடு​கிறார்.

திமுக அணி​யில் விசிக-வுக்கு 8 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. இந்​தத் தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவன் நேற்று இரவு அறி​வித்​தார். அதன்​படி, காட்​டுமன்​னார்​கோ​வில் தொகு​தி​யில் திரு​மாவளவன் போட்​டி​யிடு​கிறார்.

மேலும் அக்​கட்​சி​யின் சார்​பில் திண்​டிவனம் தொகு​தி​யில் வன்​னியரசு, கள்​ளக்​குறிச்​சி​யில் மால​தி, பண்​ருட்​டி​யில் அப்​துல் ரகு​மான், அரக்​கோணத்​தில் எழில் கரோலி​னா, செய்​யூரில் சிந்​தனைச் செல்​வன், திருப்​போரூரில் பன்​னீர்​தாஸ், பெரியகுளத்​தில் ஆற்​றல் அரசு ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

          

திமுக அணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட 5 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் அறி​வித்​தார்.

அதன்​படி, திருத்​துறைப்​பூண்​டி​யில் க.மாரி​முத்​து, தளி தொகு​தி​யில் டி.​ராமச்​சந்​திரன், பவானி​சாகரில் பி.எல்​.சுந்​தரம், திருப்​பூர் வடக்கு தொகு​தி​யில் ரவி (எ) எம். சுப்​பிரமணி​யம், ஸ்ரீவில்​லிபுத்​தூரில் பி.ம​காலிங்​கம் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். கதிர்​அரி​வாள் சின்​னத்​தில் இவர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதில் டி.​ராமச்​சந்​திரன் மற்​றும் க.மாரி​முத்து ஆகியோர் ஏற்​கெனவே தளி மற்​றும் திருத்​துறைப்​பூண்​டி​யில் எம்​எல்​ஏ.க்​களாக உள்​ளனர்.

ரவிக்​கும், பி.எல்​.சுந்​தரத்​துக்​கும் கடந்த முறை போட்​டி​யிட்ட அதே தொகு​தி​களில் மீண்​டும்​வாய்ப்​பளிக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர் அறி​விப்​புக்கு பின் செய்​தி​யாளர்​களிடம் மு.வீர​பாண்​டியன் கூறுகை​யில், “தி​முக​விடம் நாங்​கள் கேட்ட 5 தொகு​தி​களை கிடைக்​கபெற்ற நிலை​யில், மாநிலக் குழு, மாவட்​டக்​குழு கூட்​டங்​களை கூட்டி வேட்​பாளர்​களை தேர்வு செய்து ஒரு மனதாக அறி​வித்​துள்​ளோம்​.

இவர்​கள் ஐவரும் கட்​சி​யின் மாணவர் அமைப்​பு,இளைஞர் அமைப்​பு​களில் பணிபுரிந்​தவர்​கள். இந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி போட்​டி​யிடும் 5 தொகு​தி​களி​லும்​நிச்​சய​மாக வெற்​றி​பெறு​வோம்.” என்று கூறி​னார்.

மேலும், திமுக கூட்​ட​ணி​யில் எஸ்​டிபிஐ கட்​சிக்கு நன்​னிலம் தொகுதி ஒதுக்​கப்​பட்​டது. இந்​தத் தொகு​தி​யில் வேட்​பாள​ராக அக்​கட்​சி​யின் மாநிலத் தலை​வர்​ முகமது மு​பாரக்​ அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT