அதிமுக​ இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் போட்டி

அதிமுக​ இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் போட்டி
Updated on
2 min read

அதி​முக​வில் 17 பேர் கொண்ட இறுதி வேட்​பாளர் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ராக ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ளர் சந்​தான கிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக​வுக்கு 27 தொகு​தி​கள், பாமக​வுக்கு 18 தொகு​தி​கள், அமமுக​வுக்கு 11 தொகு​தி​கள், தமாகா​வுக்கு 5 தொகு​தி​கள் மற்​றும் இதர கட்​சிகளுக்கு 6 தொகு​தி​கள் என மொத்​தம் 67 தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அதி​முக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. முதற்​கட்​ட​மாக 23 வேட்​பாளர்​களும் 2-ம் கட்​ட​மாக 127 வேட்​பாளர்​களும் அறிவிக்​கப்​பட்​டனர். அந்த 150 வேட்​பாளர்​களில் 42 புது​முகங்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை மற்​றும் ஒருசில தொகு​தி​கள் என மொத்​தம் 17 வேட்​பாளர்​களின் பட்​டியல் வெளி​யிடப்​ப​டா​மல் இருந்​தது. இந்​நிலை​யில், நேற்று 17 பேர் கொண்ட இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதன் விவரம்: முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி​யில் ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ளர் பி.சந்​தான கிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

துணை முதல்​வர் உதயநிதி போட்​டி​யிடும் சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் அதி​முக அமைப்பு செய​லா​ளர் ஆதி​ராஜா​ராம் போட்​டி​யிடு​கிறார். அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு போட்​டி​யிடும் துறை​முகம் தொகு​தி​யில் கட்​சி​யின் அமைப்பு செய​லா​ளர் ராயபுரம் மனோ போட்​டி​யிடு​கிறார். மறைந்த பகுஜன் சமாஜ்தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி திரு.​வி.க.நகரில் போட்​டி​யிடு​கிறார்.

முன்​னாள் அமைச்​சர்​கள் பா.வளர்​மதி -ஆயிரம் விளக்​கு, எஸ்​.கோகுல இந்​திரா - அண்ணா நகர், விருகை ரவி - விரு​கம்​பாக்​கம், தி.நகர் சத்யா - தியாக​ராயநகர், எம்​.கே.அசோக், வேளச்​சேரி தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றனர்.

மேலும், கே.பி.கந்​தன் - சோழிங்​கநல்​லூர், ஆர்​.எஸ்​.​ராஜேஷ் - ஆர்​.கே.நகர், எஸ்​.ஆர்​.​விஜயகு​மார்- வில்​லி​வாக்​கம், எஸ்​.சர​வணன் - ஆலந்​தூர், அபிஷேக் ரங்​க​சாமி - எழும்​பூர், என்​.​முரு​கு​மாறன் - திட்​டக்​குடி, தன.​விமல்- ஆலங்​குடி, எம்​.எஸ்​.ஆர்​.​ராஜவர்​மன் - திருச்​சுழி தொகு​தி​களி​லும் போட்​டி​யிடு​கின்றனர்.

யார் இந்த சந்​தான கிருஷ்ணன்? - சென்​னை, திரு.​வி.க.நகர் தொகு​திக்கு உட்​பட்ட புளியந்​தோப்பு பகு​தி​யைச் சேர்ந்​தவர் பி.சந்​தானகிருஷ்ணன் (51). ஐடிஐ படித்​துள்​ளார். ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். கடந்த 2011-16 கால​கட்​டத்​தில் சென்னை மாநக​ராட்​சி​யில் 75-வது வார்டு அதி​முக கவுன்​சில​ராக இருந்​தார். டிடிவி தினகரன் அதி​முக​விலிருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​போது, அவரின் ஆதர​வாள​ராக மாறி​னார்.

தினகரன், அமமுகவை தொடங்​கிய​போது, மாவட்ட செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது. கடந்த 2019 மக்​களவை தேர்​தலில் அமமுக சார்​பில் வட சென்னை தொகு​தி​யில் போட்​டி​யிட்டு 33,277 வாக்​கு​களை பெற்று தோல்​வியடைந்​தார். பின்​னர் அதி​முக​வில் இணைந்த இவர், கட்​சி​யில் ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ள​ராக உள்​ளார்.

இவர் துறை​முகம் தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்பு கேட்​டிருந்​தார். அங்​கு, ராயபுரம் மனோபோட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்த நிலை​யில், முதல்​வர் ஸ்டா​லினை எதிர்த்து போட்​டி​யிடும் வாய்ப்பை பழனி​சாமி வழங்​கி​யுள்​ளார்.

அதிமுக​ இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் போட்டி
அதிமுக கூட்டணியில் கடுகளவு கூட பிரச்சினை இல்லை: பழனிசாமி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in