விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்தார்.
“தேமுதிகவுக்கு எவ்வளவு தொகுதி வேண்டுமானாலும் கொடுங்கள், எங்களுக்கு பிரச்சினை இல்லை. தேமுதிகவுக்கு அள்ளிக் கொடுக்கலாம்” என்று முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக அணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் பத்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கும்போது எங்களுக்கு ஏன் குறைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கெனவே திமுகவிடம் கேள்வி எழுப்பின. இந்நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்குமாறு ஸ்டாலினிடம் தெரிவித்தேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு திருமாவளவன் நேற்று வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினிடம், ‘தேமுதிகவுக்கு எவ்வளவு தொகுதி வேண்டுமானாலும் கொடுங்கள், எங்களுக்கு பிரச்சினை இல்லை. தேமுதிகவை அதிமுக இழுத்துச் செல்ல முயன்றபோது, அதற்கு இணங்காமல், நம் கூட்டணியில் இணைந்திருக்கிறார். எனவே அவருக்கு அள்ளிக் கொடுக்கலாம்’ என்று தெரிவித்தேன். இவ்வாறு அவர் பேசினார்.