தமிழகம்

கடலோர தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வளிமண்டல சுழற்சி காரண​மாக, கடலோர தமிழகத்​தில் ஒரு சில இடங்​களில் இன்று மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்​பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடக்கு கேரளா மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்​சி​யும், தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்​சி​யும் நில​வு​கிறது.

இதனால், இன்று (டிச.31) கடலோர தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. நீல​கிரி மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்​ளது.

நாளை (ஜன.1) தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும், இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

SCROLL FOR NEXT