பாரிமுனையில் 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் சாலை மறியல்

சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.

சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.

Updated on
1 min read

சென்னை: நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி, பாரிமுனையில் 500-க்​கும் மேற்​பட்ட ஆக்​கிரமிப்பு கடைகள் அகற்​றப்​பட்​டன. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வியா​பாரி​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

சென்னை பூக்​கடை, பாரிமுனை என்​எஸ்சி போஸ் சாலை நடை​பாதை​யில் 500-க்​கும் மேற்​பட்ட கடைகள் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்​தன. இதனால் அந்த பகு​தி​யில் அரசு பேருந்​துகள், கார் உள்பட அனைத்து வித​மான வாக​னங்​களும் செல்​வ​தில் சிரமம் இருந்​தது. இதனால், எப்​போதும் வாகன நெரிசல் ஏற்​பட்டு போக்​கு​வரத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்​டும் என வலி​யுறுத்தி நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடரப்​பட்​டது. இதுதொடர்​பாக விசா​ரணை மேற்​கொண்ட நீதி​மன்​றம், சாலையை ஆக்​கிரமித்​துள்ள கடைகளை அகற்ற வேண்​டும் என மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டது. இருப்​பினும், இந்த உத்​தரவை நடை​முறைப்​படுத்​து​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, நீதி​மன்​றம் மீண்​டும் ஒரு உத்​தரவு பிறப்​பித்​தது. அதில், ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்​றி, அதுகுறித்த ஆவணங்​களை நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, சென்னை மாநக​ராட்சி ராயபுரம் மண்டல பகுதி செயற்​பொறி​யாளர் பழனி, உதவி செயற்​பொறி​யாளர் கண்​ணன், உதவி பொறி​யாளர் கார்த்​திக் தலை​மை​யில் மாநக​ராட்சி ஊழியர்​கள் ஜேசிபி இயந்​திரம், பொக்​லைன், உதவி​யுடன் நூற்​றுக்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள், ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்​றும் பணி​யில் நேற்று ஈடு​பட்​டனர்.

இதனால் பூக்​கடை பகு​தி​யில் பரபரப்பு நில​வியது. அசம்​பா​விதங்​கள் நடை​பெறாமல் இருக்க பூக்​கடை துணை ஆணை​யர் சுந்தர வடிவேல் உத்​தர​வின் பேரில் உதவி ஆணை​யர் தட்​சிணா​மூர்த்தி தலை​மை​யில் ஆய்​வாளர்​கள் புஷ்ப​ராஜ், பிரபு, மனோன்​மணி மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

அசம்​பா​விதங்​கள் ஏதேனும் ஏற்​பட்​டால் உடனடி​யாக அவர்​களை அழைத்​துச் செல்ல ஆம்​புலன்​ஸ், தீயணைப்பு வாக​ன​மும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டன. இதற்​கிடையே, ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரி​வித்து கடை உரிமை​யாளர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினர் என்​எஸ்சி போஸ் சாலை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால், அந்த பகு​தி​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்து போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லும்​படி அறி​வுறுத்​தினர். அவர்​கள் கேட்​காத​தால் குண்​டுக்​கட்​டாக அகற்​றப்​பட்​டனர். இதனால், போலீ​ஸாருக்​கும், வியா​பாரி​களுக்​கும் இடையே வாக்​கு​வாதம் மற்​றும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதனால், அந்த பகு​தி​யில் பரபரப்​பான சூழல்​ நில​வியது.

<div class="paragraphs"><p>சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர். </p></div>
சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in