அதிமுக தலைமையகத்தில் விருப்ப மனுக்களை பெற்ற நிர்வாகிககள் | கோப்புப் படம்

 
தமிழகம்

அதிமுகவில் 10,175 பேர் விருப்ப மனு; இபிஎஸ் பெயரில் 2,187 மனுக்கள்!

மோகன் கணபதி

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 7,988 பேர் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளதாகவும், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட 2,187 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பின் பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி, 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி', தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் இந்த ஆண்டு நடை​பெறும் சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்றி பெற வேண்​டும் என்​ப​தில் அதி​முக தீவிர​மாக உள்​ளது. பாஜக​வுடன் கூட்​டணி அமைத்​தா​லும், தனித்து ஆட்சி என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த டிச.15 முதல், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலு​வலகத்​தில் விருப்ப மனுக்​கள் விநியோகிக்​கப்​பட்டு வந்தது. அந்த மனுக்​களில் 25 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டிருந்​தன. பொது மற்​றும் தனித்தொகு​தி​கள் அனைத்​துக்​கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்​கள் பெறப்​பட்​டன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT