தமிழகம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்தை தொடங்கி வைக்க முதல்​வர் விஜய் நாளை (செப். 28) மதுரை வரு​கிறார்.

‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ வழங்​கும் திட்​டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் நாளை தொடங்கி வைக்​கிறார். இதற்​காக மதுரைக்கு விமானத்​தில் நாளை காலை வரும் முதல்​வர், முதலில் மீனாட்சி அம்​மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்​கிறார்.

பின்​னர், மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை கூட்​டரங்​கில் தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்தை தொடங்கி வைத்​து, 25 குழந்​தைகளுக்கு மோதிரம் அணிவிக்​கிறார். பிரசவ வார்​டுக்கு சென்​று, அன்​றைய தினத்​தில் பிறந்த குழந்​தைகளுக்கு மோதிரம் அணிவிக்​கிறார்.

பின்​னர், புதுப்​பிக்​கப்​பட்ட காந்தி அருங்​காட்​சி​யத்தை முதல்​வர் திறந்து வைத்து பார்​வை​யிடு​கிறார். 4,000 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட உள்​ளனர்​.

SCROLL FOR NEXT