தமிழகம்

வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது?

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அ​திமுக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான டெண்​டர் முறை​கேடு வழக்​கில் மத்​திய அரசின் அனு​மதி கிடைத்​ததும் இந்த வழக்கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள இரு ஐஏஎஸ் அதி​காரி​கள் மீதும் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என தமிழக அரசு உயர் நீதி​மன்​றத்​தில் விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்​சராக இருந்த எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ராக ரூ.98 கோடி டெண்​டர் முறை​கேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது அதுதொடர்பான வழக்​கு நிலுவையில் இருந்து வருகிறது.

          

இந்த வழக்கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள ஐஏஎஸ் அதிகாரி​களான கந்​த​சாமி மற்​றும் விஜய​கார்த்​தி​கேயன் ஆகியோ​ருக்கு எதி​ரான நீதி​மன்ற வழக்கு விசா​ரணைக்கு மத்​திய அரசின் அனு​மதி பெறு​வதில் உள்ள குளறு​படிகள், கால தாமதம் தொடர்பாக தமிழக அரசின் பொதுத் துறைச் செயலர், ஊழல் தடுப்பு ஆணை​யர் மற்​றும் லஞ்ச ஒழிப்​புத்​துறை இயக்​குநர் உள்​ளிட்​டோர் பதிலளிக்க உயர் நீதிமன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது பொதுத்​துறைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்​கூர், ஊழல் தடுப்பு ஆணை​யர் கே.மணி​வாசன், லஞ்​சஒழிப்​புத் துறை இயக்​குநர் அபய்​கு​மார் சிங் ஆகியோர் தரப்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில் இந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட இரு ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ரான நீதி​மன்ற வழக்கு விசா​ரணைக்கு மத்​திய அரசிடம் அனு​மதி பெறு​வ​தில் ஏற்​படும் தாமதம் வேண்​டு மென்றே ஏற்​பட்​டதல்ல என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் ஆஜராகி, இரு ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு எதி​ரான வழக்கு விசா​ரணைக்கு அனு​ம​தி​கோரி அனுப்​பிய கடிதம் தற்​போதும் மத்​திய அரசிடம் நிலு​வை​யில் உள்​ளது. இதன்பேரில் நினை​வூட்​டல் கடிதங்​களும் தொடர்ந்து அனுப்​பப்​பட்​டுள்​ளன.

இந்த விவ​காரத்​தில் எந்த அதி​காரியை​யும் பாது​காக்​கும் எண்​ணம் அரசுக்கு இல்​லை. அந்த அதி​காரி​கள் இரு​வரும் வழக்​கில் குற்​றம்​ சாட்​டப்​பட்​ட​வர்​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். மத்​திய அரசின் அனு​மதி கிடைத்​ததும் அடுத்​தக் கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT