சென்னை: திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தினர்.
13 பேர் பட்டியல்
இந்த முறைகேடு தொடர் பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 26 பக்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கு விவரம் வெளியாகி உள்ளது. அதில் முதல் குற்றவாளி (குற்றம் சாட்டப்பட்டவர்) என்றுகே.என்.நேரு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருடைய சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், டி.வி.எச். கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தடி.ரமேஷ் , டி.பிரபு, கோவை நகர மைப்பு முன்னாள் அலுவலர்
ஆர்.சசிப்ரியா, நகராட்சி நிர்வாகத்துறை திருப்பூர் மண்டல முன்னாள் இன்ஜினீயர்கள் ஜி.பாலச்சந்திரன், ஜி.முருகேசன், திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் ( மாத
வரம்), ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர்) உள்பட 13 பேர் அடுத்தடுத்து குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறைகளின் அடையாளம் தெரியாத அதிகாரிகள், அடையாளம் தெரியாத தனியார் நபர்கள், ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
‘கட்சி நிதி' என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சம்மன்
கே.என்.நேருவின் உதவியாளர் கவி பிரசாத்தின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள், குறுந்தகவல் அனுப்பிய ஸ்கீரின்ஷாட்டுகள், டெண்டர் முடிவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்ட விவரம் ஆதாரப்பூர்வ மாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற பணிகள், அதற்கு பெறப்பட்ட கமிஷன் தொகை விவரங்கள் பட்டியலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.