தமிழகம்

அனைத்து கோயில்களிலும் இன்று முதல் கோயில் நிர்வாகமே பிரசாதம் வழங்கும்: அறநிலையத் துறை

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகக் கோயில்​களில் இன்று முதல் கோயில் நிர்​வாகமே பிர​சாதங்​களை தயாரித்​து, பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அறநிலை​யத் துறை சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

கன்​னி​யாகுமரியைச் சேர்ந்த நாக​ராஜன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திருப்​பதி லட்​டு, பழநி பஞ்​சாமிர்​தம், அழகர்​கோ​வில் தோசை, ஸ்ரீவில்​லிபுத்​தூர் அக்​கார அடிசல் போன்ற பக்​தர்​களுக்கு வழங்​கப்​படும் பிர​சாதங்​களுக்கு தனிச்​சிறப்பு உண்​டு. மதுரை​யில் மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் பக்​தர்​களுக்கு இலவச லட்டு வழங்​கப்​படு​கிறது. கோயில்​களில் பிர​சாத விற்​பனை நிலை​யங்​கள் செயல்​படு​கின்​றன. கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் பிர​சாதங்​களை வாங்​கிச் செல்​கின்​றனர். இதனால், கோயில்​களில் வழங்​கப்​படும் பிர​சாதங்​களின் தரத்தை உறுதி செய்​வது கோயில் நிர்​வாகத்​தின் கடமை.

இந்​நிலை​யில், கோயில்​களில் வணிக நோக்​கில் காலி​யிடங்​களில் கடைகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டது. அதன்​படி, கோயில்​களில் பிர​சாதம் தயாரிப்பு மற்​றும் விற்​பனையை தனி​யாருக்கு குத்​தகைக்கு வழங்​கப்​பட்​டது. இந்த பிர​சாதத்​தின் தரம் உறுதி செய்​யப்​படு​கிற​தா, இல்​லையா என்​பது தெரிய​வில்​லை. கோயில் நிர்​வாகமே நேரடி​யாகப் பிர​சாதத்தை தயாரித்து விநி​யோகிப்​பது குறித்து பரிசீலிக்​க​வும், அதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராய​வும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதனிடையே, தமிழ்​நாடு முழு​வதும் இந்​துசமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் செயல்​படும் பிர​சாத விற்​பனை நிலை​யங்​கள் மற்​றும் தேங்​காய், பழங்​கள், பூக்​கள், மாலைகள் விற்​பனை செய்​யும் கடைகளுக்​கான குத்​தகை உரிமம் ஜூன் 30 தேதி​யுடன் முடிவடைகிறது. இந்த உரிமங்​களை புதுப்​பிப்​பது தொடர்​பாக அறநிலை​யத்துறை அதி​காரி​கள் எந்த அறி​விப்​பும் வெளி​யிட​வில்​லை. இதனால், ஜூன் 30-க்கு பிறகு கோயில்​களில் பிர​சாத நிலை​யங்​கள் செயல்பட முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

எனவே, தமிழ்​நாடு முழு​வதும் அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் இன்று முதல் (ஜூலை 1) பக்​தர்​கள் வழிபடு​வதற்​குத் தேவை​யான தேங்​காய், பழங்​கள், பூக்​கள் மற்​றும் மாலைகள் போன்ற பூஜைப் பொருட்​களும், பக்​தர்​களால் நம்​பிக்​கை​யுடன் வாங்​கப்​படும் லட்​டு, அரவணை மற்​றும் பஞ்​சாமிர்​தம் போன்ற பிர​சாதங்​களும் எவ்​விதத் தட்​டுப்​பாடும் இன்றி தொடர்ந்து கிடைப்​பதை உறுதி செய்ய உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்வு விசா​ரித்​தது. அறநிலை​யத் துறை தரப்​பில், நாளை (இன்​று) முதல் கோயில்​களில் கோயில் நிர்​வாகம் சார்​பில் பிர​சாதம் தயாரித்து பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டது. இதை நீதிப​தி​கள் பதிவு செய்​து​கொண்​டு, வழக்கை முடித்து வைத்து உத்​தரவிட்​டனர்.

SCROLL FOR NEXT