சென்னை: உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்.18 வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிக்கும்.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதையால், மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள், ராமநாதபுரம் காரைக்காலிலும் ஏப்.20 வரை லேசான மழை பெய்யும்.
உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்.18 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.