தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக: ஆணையத்தில் அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக: ஆணையத்தில் அதிமுக புகார்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பே​வைத் தேர்​தல் நடை​பெறு​வதை யொட்டி கோவை தெற்​கு, பர்​கூர், பாலக்​கோடு உள்​ளிட்ட தொகு​திகளில் திமுக​வினர் தேர்​தல் நடத்தை விதி​களை மீறி வாக்​காளர்​களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்​பன் வழங்கி வரு​வ​தாக அதி​முக சார்​பில் தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அதி​முக மாநில வழக்​கறிஞரணி துணைச் செய​லா​ள​ரான ஆர்​.ஏ.எஸ்​.செந்​தில்​வேல் இந்​திய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் மாநில தலைமை தேர்​தல் அதி​காரி உள்​ளிட்​டோருக்கு அனுப்​பி​ய புகார் மனுவில் கூறியதாவது: தமிழகம் முழு​வதும் பல்​வேறு தொகு​தி​களில் திமுகவினர் தேர்​தல் நடத்தை விதி​களைமீறி வாக்​காளர்​களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்​புள்ள கூப்​பன்​களை சட்​ட​விரோத​மாக வழங்கி வரு​கின்​றனர்.

குறிப்​பாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி போட்​டி​யிடும் கோவை தெற்​கு, மதி​யழகன் போட்​டி​யிடும் பர்​கூர் மற்​றும் செந்​தில்​கு​மார் போட்​டி​யிடும் பாலக்​கோடு உள்​ளிட்ட தொகு​தி​களில் வாக்​காளர்​களுக்கு ஆளுங்​கட்​சி​யான திமுக சார்​பில் ரூ.8 ஆயிரம் மதிப்​புள்ள கூப்​பன்​களை வழங்கி வரு​வது மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி விதி​மீறலாகும்.

திமுக​வினர் தேர்​தலில் குறுக்கு வழி​யில் வாக்​கு​களைப் பெறும் நோக்​கில், தேர்​தலுக்கு முன்​பாகவே ரூ.8 ஆயிரம் மதிப்​புள்ள கூப்​பன்​களை சீரியல் நம்​பர்​களு​டன் வாக்​காளர்​களுக்கு டோக்​கன்​களாக வழங்கி வரு​வது தேர்​தல் நடத்தை விதி​களுக்கு எதி​ரானது மட்​டுமின்றி சட்​ட​விரோத​மான​தாகும்.

இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் சம்​பந்​தப்​பட்ட​வர்கள் மீது விரை​வான நடவடிக்கை எடுத்​து, இதுவரை வழங்​கப்​பட்ட கூப்​பன்​களை பறி​முதல் செய்து நேர்​மை​யாக தேர்​தல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக: ஆணையத்தில் அதிமுக புகார்
நாகர்கோவிலுக்கு பிரதமர் வருகை: கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று ரோடு ஷோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in