தமிழகம்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் ஒரு சில இடங்​களில் இன்று முதல் மே 2-ம் தேதி வரை வெப்​பநிலை இயல்​பை​விட 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மாக இருக்​கக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது குறித்​து, சென்னை வானிலை ஆய்வு மையத்​தின் உயர​தி​காரி​யும், விஞ்​ஞானி​யு​மான வி.ஆர்​.துரை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடக்கு தெலங்​கானா முதல் குமரிக்​கடல் வரை 0.9 கி.மீ. உயரத்​தில் உள் கர்​நாட​கா, ராயலசீமா மற்​றும் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதனால்​,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், தென்​தமிழக கடலோர மாவட்​டங்​கள் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களின் கடலோரப்​பகு​தி​கள், காரைக்​கால் பகு​தி​யில் ஓரிரு இடங்​களில் இன்று (ஏப்​.29) மித​மான மழை பெய்​யும். ஏனைய தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் வறண்ட வானிலை நில​வக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​காலில் ஒரு சில இடங்​களில் நாளை (ஏப்​.30)​முதல் மே 2-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஏப்​.30-ம் தேதி நீல​கிரி, கோயம்​புத்​தூர், ஈரோடு, சேலம், தரு​மபுரி மற்​றும் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.

மே 1, 2 ஆகிய தேதி​களில் நீல​கிரி, கோயம்​புத்​தூர், திருப்​பூர், தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யக்​கூடும். மே 3, 4-ல் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று முதல் மே 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை ஒரு சில இடங்​களில் 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் இயல்பை விட அதி​க​மாக இருக்​கக்​கூடும். மேற்​படி நாட்​களில் வெப்​பநிலை​யும், ஈரப்​ப​த​மும் அதி​கரிக்​கும் நிலை​யில், கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் அசவுகரி​யம் ஏற்​படலாம்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்​று(ஏப்​.29) வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 38 முதல் 39 டிகிரி செல்​சி​யஸை ஒட்​டி​யும், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 28 டிகிரி செல்​சி​யஸை ஒட்​டி​யும் இருக்​கக்​கூடும்​. இவ்​வாறு அறிக்கையில்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT