தமிழகம்

டாஸ்மாக் குறித்து புகாரளிக்க வாடிக்கையாளர் சேவை மையம்: அமைச்சர் விக்னேஷ் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மது​விலக்கு, ஆயத்​தீர்வை அமைச்​சர் விக்​னேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: டாஸ்​மாக் சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள் மற்​றும் சேவை​கள் தொடர்​பாக நுகர்​வோர், பொது​மக்​கள் தங்​களது புகார்​கள், குறை​கள் மற்​றும் இதர பிரச்​சினை​களை தெரிவிக்​கும் வகை​யில், டாஸ்​மாக் கட்​ட​ணமில்லா வாடிக்​கை​யாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மற்​றும் அதி​காரப்​பூர்வ வாட்​ஸ்​அப் எண் 73977 20230 ஆகிய​வற்​றைத் தொடர்​பு​கொண்டு 24 மணி நேர​மும் தெரிவிக்​கலாம். மேலும், டாஸ்​மாக் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ சமூக ஊடக கணக்​கு​கள் மூல​மும் புகார் தெரிவிக்​கலாம். புகார்​கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT