தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்

செய்திப்பிரிவு

செங்​கல்​பட்டு: மது​ராந்​தகம், தாராபுரம் தொகுதி இடைத்​தேர்​தலை முன்​னிட்​டு, செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் 4 நாட்​களுக்கு டாஸ்​மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தொகு​திக்​கான இடைத்​தேர்​தலை முன்​னிட்டு வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மற்​றும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் 9-ம் தேதி என மொத்​தம் 4 நாட்​களுக்கு மாவட்​டத்​தில் இயங்​கிவரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற தனி​யார் மது​பானக் கடைகள், மது​பானக் கூடங்​கள் மூடப்​படு​வ​தாக மாவட்ட ஆட்​சி​யர் மு.வீரப்​பன் தெரி​வித்​து உள்​ளார்.

தாராபுரம் தொகுதி இடைத்​தேர்​தலை​யொட்டி திருப்​பூர் மாவட்​டம் முழு​வதும் டாஸ்​மாக் மது​பானக்​கடைகள், அரசு உரிமம் பெற்ற மது​பானக்​கூடங்​கள் ஆகியவையும் 4 நாட்கள் மூடப்​படும் என்று மாவட்ட ஆட்​சி​யர் மனிஷ் நாரணவரே அறி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT