பத்மஸ்ரீ விருதாளர்கள் (இடமிருந்து) சாமிநாதன், கிருஷ்ணன், ராஜா ஸ்தபதி, பழனிவேல், பக்தவத்சலம், புண்ணியமூர்த்தி.

 
தமிழகம்

பத்மபூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தைச் சேர்ந்த 14 பேருக்கு பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்​ளிட்ட விருதுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு எஸ்​கேஎம் குழும நிறு​வனங்​களின் நிறு​வனரும், தலை​வரு​மான டாக்​டர் எஸ்கேஎம்​. மயி​லானந்​தனின் சமூக சேவையைப் பாராட்டி மத்​திய அரசு பத்​மபூஷண் விருது அறி​வித்​துள்​ளது. இவர் 2013-ல் பத்மஸ்ரீ விருது பெற்​றவர்.

ஈரோடு மாவட்​டத்​தில் விவ​சாயக் குடும்​பத்​தில் 1945-ல் பிறந்த மயிலானந்​தன் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்​டுமே கல்வி பயின்றவர். 1983-ல் கோழிப்​பண்​ணை​யாளர்​கள் நலச் சங்​கத்​தைத் தொடங்​கிய இவர், நவீன கிராமப்​புற சந்​தைப்​படுத்​தல் பண்​ட​மாற்று முறையை அறி​முகப்​படுத்​தி, அதில் வெற்றி கண்​ட​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

          

தஞ்சை மாவட்​டம் திருக்​கரு​காவூரைச் சேர்ந்த சாமி​நாதன்​(81), தரும்​புரம் ஆதீனத்​துக்கு உட்​பட்ட குமரக்​கட்​டளை தேவஸ்தானத்தில் ஓது​வார் பணி​யைத் தொடங்​கி​னார். திருத்​தணி முரு​கன் கோயி​லில் 1974 முதல் 2000 வரை 26 ஆண்​டு​கள் ஓதுவாராகப் பணி​யாற்​றிய இவர், பின்​னர் விருப்ப ஓய்​வு​பெற்று பல்​வேறு கோயில்​களில் ஓது​வா​ராகப் பணிபுரிந்​தார்.

தற்​போது தரு​மபுரம் ஆதீன தேவார பாட​சாலை​யில் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி வெள்ளரிக்​கோம்பை பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆர்​.கிருஷ்ணன். ஆலு குரும்​பர் பழங்​குடி​யின சமூகத்​தைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான இவர் ‘கிட்​னா’ என்று மக்​களால் அழைக்​கப்​பட்​டார்.

30 ஆண்​டு​களாக பழங்​குடி​யின பாரம்​பரியக் கலையை பிரபலப்​படுத்திய இவர், பழங்​குடி​யினரின் வாழ்​வியலை ஓவி​யங்​களாக வடித்​துள்​ளார். கடந்த ஆண்டு உடல்​நலக்​குறை​வால் உயி​ரிழந்த கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது.

சேலம் கன்​னங்​குறிச்​சி​யைச் சேர்ந்த ராஜா ஸ்த​ப​தி, கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக கடவுள் சிலைகளை உரு​வாக்கி வரு​கிறார். கடந்த ஆண்டு 13.6 அடி உயர நர்த்தன நடராஜர் சிலையை வடிவ​மைத்​தார். தஞ்சை பெரிய கோயி​லில் உள்ள 14 அடி உயர நாகா பரணத்​தை​யும் இவர் உரு​வாக்​கி ​உள்​ளார். மலேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட நாடு​களி​லும் இவர் சிலைகளை வடிவ​மைத்​துள்​ளார்.

தேசிய விருது உள்​ளிட்ட விருதுகளைப் பெற்​றுள்ள ராஜா ஸ்த​ப​திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

புதுச்​சேரி பூர்​ணாங்​குப்​பம் திர​வுபதி அம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சிலம்​பாட்​டக் கலைஞர் பழனிவேல்​(53), 18 வயதில் தெருக்​கூத்​துக் கலைஞ​ராக கலைத் துறை​யில் நுழைந்​தவர்.

தொடர்ந்​து, சிலம்​பாட்​டம் மற்​றும் காளி​யாட்​டம், மயி​லாட்​டம், ஒயி​லாட்​டம், கரகாட்​டம் உள்​ளிட்ட நாட்​டு​புறக் கலைகளை கற்ற இவர், பிரான்​ஸ், துபாய் உள்​ளிட்ட 10 நாடு​களில் சிலம்​பப் பயிற்சி அளித்​துள்​ளார்.

பல்​வேறு போட்​டிகளி​லும் வென்​றுள்ள இவருக்கு 2012-ல் கலை​மாமணி விருது வழங்​கப்​பட்​டது. தற்​போது இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திரு​வாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்​வான் பக்​தவத்​சலம் அகில இந்​திய வானொலி​யில் ஏ கிரேடு கலைஞ​ராகப் பணி​யாற்​றிய​வர்.

1992-ல் ஸ்பெ​யினில் நடை​பெற்ற ஒலிம்​பிக் போட்டி தொடக்க விழா​வில் மிருதங்​கம் இசைத்​தார். பல்​வேறு நாடு​களில் இசை நிகழ்ச்​சிகளை நடத்​தி​யுள்ள இவர் ஏற்​கெனவே கலை​மாமணி உள்​ளிட்ட விருதுகளைப் பெற்​றுள்ளார். தற்​போது பக்​தவத்​சலத்​துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தஞ்​சாவூரைச் சேர்ந்த பேராசிரியரும், புகழ்​பெற்ற கால்​நடை மருத்​து​வரு​மான ந.புண்​ணி​யமூர்த்​தி(68), தஞ்சை கால்​நடை மருத்​து​வப் பல்​கலை.​யில் பணி​யாற்​றிய​வர்.

கால்​நடைகளுக்​கான பல்​வேறு நோய்​களுக்​குச் சித்த மருந்து மற்​றும் வீட்டு வைத்​திய முறை​கள் மூலம் சிகிச்சை அளித்​துள்​ளார். மேலும், கால்​நடை உரிமை​யாளர்​களுக்கு இலவச ஆலோ​சனை​களை வழங்​கி, பாரம்​பரிய மருத்​து​வத்​தின் முக்​கி​யத்​து​வத்தை எடுத்​துரைக்​கிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT