தமிழகம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யலாம்: தமிழிசை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பரந்​தூர் விமான நிலைய திட்​டத்தை அரசு மறு பரிசீலனை செய்​ய​லாம் என தமிழிசை சவுந்​தர​ராஜன் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

திரு​வள்​ளூரில் நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சட்​டப்​பேரவை நிகழ்​வு​கள் நேரலை​யில் வரு​வது மகிழ்ச்​சி.

ஆனால் ஆக்​கப்​பூர்​வ​மாக மக்​களுக்கு சென்று சேரு​கிறதா என்​பது மிகப்​பெரிய கேள்விக்​குறி. மக்​கள் ஆர்​வ​மாக பார்க்க ஆரம்​பித்​திருக்​கிறார்​கள்; இன்​னும் ஆரோக்​கிய​மாக பேரவை நடக்க வேண்​டும்.

காவல் துறை மானியக் கோரிக்​கைக்கு முதல்​வர் பதில் கூறவுள்ள நிலை​யில் தலைநகரில் தவெகவைச் சேர்ந்​தவர் கொலை செய்​யப்​பட்​டிருப்​பது கவலை​யளிக்​கிறது, பாது​காப்பு வேண்​டும் என கட்​சி​யில் சேர்ந்​தவருக்கு ஆட்​சியே பாது​காப்பு தரவில்​லை.

தலைநகரில் சட்​டம் ஒழுங்கு எங்கே இருக்​கிறது, முதல்​வரிடமே இந்​தத் துறை இருக்​கும் நிலை​யில் பாது​காப்​பற்ற சூழ்​நிலை நில​வுவது நல்​லதல்ல. தமிழக மக்​கள் விஜய்க்கு முதல்​வர் வாய்ப்​பைக் கொடுத்​திருக்​கிறார்​கள், மக்​களுக்கு முழு​மை​யான சேவையைச் செய்​வதற்கு முயற்​சியை மேற்​கொள்​ளுங்​கள்.

ஆங்​காங்கே கொலைகள் நடக்​கின்​றன, மேட்​டூரில் 45 நாட்​கள் மட்​டும் கழித்து தண்​ணீர் திறந்து விடப்​படு​கிறது, 3 தமிழர்​கள் கர்​நாட​கா​வில் கொல்​லப்​படு​கிறார்​கள், தமிழக விவ​சா​யிகள் அதி​கக் கடன் சுமை​யில் தத்​தளிக்​கிறார்​கள், தூய்​மைப் பணி​யாளர்​கள், செவிலியர்​கள் போராடிக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இவ்​வளவு பிரச்​சினை வைத்​துக் கொண்டு அதை தீர்க்​காமல் யார் பிரதமர் என விவா​தித்​துக் கொண்​டிருப்​பது போகாத ஊருக்கு வழியைத் தேடு​வது போல் உள்​ளது. சட்​டப்​பேர​வை​யில் எப்​படி நடந்​து​கொள்ள வேண்​டும், பதில் சொல்ல வேண்​டும் என்​பதை முதல்​வர் அறிந்​திருக்க வேண்​டும்.

அரசி​யலுக்கு வந்த பின், ஒரு முதல்​வ​ராக பதில் சொல்ல வேண்​டும் என மக்​கள் எதிர்​பார்ப்​பார்​கள், பேர​வை​யின் மாண்பு பாது​காக்​கப்பட வேண்​டும். பேரவை மரி​யாதை​யாக விவா​திக்​கக்​கூடிய இடம் என்​பதை அனை​வரும் நினை​வில் வைத்​துக்​கொள்ள வேண்​டும்.

கும்​மிடிப்​பூண்​டி, செய்​யூர் பகு​தி​கள் விமான நிலை​யம் அமைக்க ஏற்​கெனவே தேர்ந்​தெடுக்​கப்​பட்​டு, இணைப்பு வசதி இல்​லாதது போன்ற காரணங்​களை ஆராய்ந்​து​தான் பரந்​தூர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது.

5700 ஏக்​கர் தேவை​யாக இருந்​தது, அதில் 1700 ஏக்​கர் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது, பணமும் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. பரந்​தூர் விமான நிலைய திட்​டத்தை மறு பரிசீலனை செய்​தால் தவறில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT