தமிழிசை சவுந்தரராஜன்

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது தவறு: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கோயில் சொத்துகள் காலங்காலமாக சூறையாடப்பட்டு வருகின்றன என்பது வேதனையான விஷயம். தமிழக அரசு கரூரில் உள்ள கோயில் நிலப் பிரச்சினை குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும். பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிலை இந்த ஆட்சியிலும் தொடர கூடாது. கடந்த திமுக ஆட்சியை மக்கள் நிராகரித்ததற்கு இந்து விரோதப்போக்குதான் காரணம். இந்த விவகாரத்தில் தவெக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது தவறு.

தமிழகத்தில் 50 நாட்களில் 4 லாக்கப் மரணங்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதை உடனே முதல்வர் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT