சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில், வாக்களித்து விட்டு வந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆழ்வார்ப்பேட்டை, எஸ்ஐஇடி கல்லூரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அவருடைய மனைவி கிருத்திகா, மகன் இன்பநிதி ஆகியோர் வருகை தந்தனர். வரிசையில் நின்று அவர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
அதன் பின்னர், வெளியே வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை பாஜக வேட்பாளரும், தெலுங்கானா ஆளுநரமான தமிழிசை சவுந்தரராஜன் நேருக்குநேர் சந்தித்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணன் வணக்கம்” என்றார். இதையடுத்து, “நலமாக இருக்கிறீங்களா” என்று முதல்வர் நலம் விசாரித்தார். தொடர்ந்து, ‘‘வாழ்த்துக்கள்” என முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து, துர்கா ஸ்டாலினிடம் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.
தேர்தல் களம் மற்றும் அரசியல் போட்டிகளைத் தாண்டி, மிகுந்த மரியாதையுடன் முதல்வர் ஸ்டாலினிடம், அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்த, அரசியல் நாகரிகம் அங்கிருந்தவர்களயும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.