தமிழகம்

மார்ச் 30-ம் தேதி தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்

சட்டப்பேரவை தேர்தலை மிஞ்சும் அளவுக்கு அனல்பறக்கிறது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு - புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்​தல் மார்ச் 30-ம் தேதி நடை​பெற உள்​ளது.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலில் மொத்​தம் உள்ள 25 உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மார்ச் 30 அன்று தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​தலில் 140-க்​கும் மேற்​பட்ட வழக்​கறிஞர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

          

இந்த தேர்​தலில் சுமார் ஒரு லட்​சம் வழக்​கறிஞர்​கள் தங்​களது விருப்ப வாக்​குரிமைப்​படி வாக்​களிக்​க​வுள்​ளனர். அதாவது வாக்​காளர்​கள் தாங்​கள் விரும்​பும் வேட்​பாளர்​களுக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் 1, 2, 3 என்ற வரிசைப்​படி நம்​பரை எழுதி வாக்​களிக்க வேண்​டும்.

இந்த 25 பேரில் ஒரு​வரை பார் கவுன்​சில் தலை​வ​ராக​வும், மற்​றொரு​வரை துணைத் தலை​வ​ராக​வும் தேர்வு செய்ய வேண்​டும். மேலும் ஒரு​வரை அகில இந்​திய பார் கவுன்​சிலுக்கு பிர​தி​நி​தி​யாக அனுப்பி வைக்க வேண்​டும். அரசு தலைமை வழக்​கறிஞர் பார் கவுன்​சிலி்ன் பதவி வழி உறுப்​பின​ராக செயல்​படு​வார்.

மார்ச் 30 அன்று நடை​பெறும் தேர்​தலில் தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் அமைக்​கப்​படும் 168 மையங்​களில் வாக்​குப் பதிவு நடை​பெறும். வாக்கு எண்​ணிக்கை ஏப்​.3-ல் தொடங்​கப்​படும். முன்​னுரிமை வாக்கு என்​ப​தால் முடிவு​கள் வெளி​யாக சில மாதங்​கள் பிடிக்​கும்.

பெண்களுக்கு 30 சதவீதம்: முதன்​முறை​யாக இந்த தேர்​தலில் உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பெண் வழக்​கறிஞர்​களுக்கு 30 சதவீதம், அதாவது மொத்​தம் உள்ள 25 பதவி​களில் 7 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இதில் 2 பெண் உறுப்​பினர்​கள் அகில இந்​திய பார் கவுன்​சிலால் நேரடி​யாக நியமிக்​கப்​படு​வர். எஞ்​சிய 5 இடங்​களுக்கு தேர்​தல் நடத்​தப்​படும் என்​ப​தால் 18 ஆண் உறுப்​பினர் பதவி​களு​டன் சேர்த்து மொத்​தம் 23 பதவி​களுக்கு மட்​டுமே இம்​முறை தேர்​தல் நடத்​தப்​பட​வுள்​ளது.

உயர் அதி​கார தேர்​தல் குழு: தேர்​தலை நடத்த இமாச்​சலப்​பிரதேச உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற தலைமை நீதிபதி ராஜிவ் ஷக்​தேர் தலை​மை​யில், சென்னை உயர் நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர்​கள் இ.ஓம்பிர​காஷ், அமித் ஜார்ஜ் ஆகியோர் கொண்ட உயர் அதி​கார தேர்​தல் குழுவை உச்ச நீதி​மன்​றம் அமைத்​துள்​ளது. அதே​போல தேர்​தலை நடத்​தும் அதி​காரி​யாக ஓய்​வு​பெற்ற நீதிபதி கே.என்​.​பாஷா நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்த தேர்​தலில் கடந்​த​முறை பார் கவுன்​சில் தலை​வ​ராக பதவி வகித்த பி.எஸ்​.அமல்​ராஜ், துணைத்​தலை​வ​ராக பதவி வகித்த வி.கார்த்​தி​கேயன், அகில இந்​திய பார் கவுன்​சில் துணைத் தலை​வ​ராக பதவி வகித்த எஸ்​.பிர​பாகரன் மற்​றும் உறுப்​பினர்​களாகப் பதவி வகித்த ஜி.மோக​னகிருஷ்ணன், ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ், கே.​பாலு, டி.செல்​வம், எம்.வேல்​முரு​கன், டி.சர​வணன், எம்.​ராஜேந்​திரகு​மார், கே.ஆர்​.ஆர்​.அய்​யப்​பமணி, என்​.​மாரப்​பன், பிரிஸில்லா பாண்​டியன், கே.சந்​திரமோகன், பி.அசோக், ஜி.​தாளை​முத்​தரசு, மைக்​கேல் ஸ்டானிஸ் பிரபு, ஆர்​.அய்​யா​வு, ஸ்ரீ​முரு​கா, கதிர​வன், சிவசுப்​பிரமணி ஆகியோர் இம்​முறை​யும் போட்​டி​யிடு​கின்​றனர்.

மேலும், அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராகப் பதவி வகித்த என்​.​விஜய​ராஜ், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்க முன்​னாள் நிர்​வாகி​களான எஸ்​. அறிவழகன், ஆர்​.​முரளி, அதி​முக வழக்​கறிஞரணி இ.பால​முரு​கன், ஓசூர் ஆனந்​தகு​மார், பாஜக வழக்​கறிஞரணி எஸ்​.​தி​வாகர், திமுக எம்.பி ஆர்​.கிரி​ராஜன், மதுரை முன்​னாள் அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்​.மோகன்​கு​மார், பி.​விஜய​ராஜா, எம்.கே.சுரேஷ், வி.ஆர்​.சு​தாகர், எம்.​வி.சதீஷ்கு​மார், முகமது ரபீ, ஏற்​கெனவே பார் கவுன்​சில் செய​லா​ள​ராக பதவி வகித்த சி.​ராஜாகு​மார், இ.சவுந்​தர​ராஜன், விக்​டர் உள்​ளிட்ட பலரும் இம்​முறை போட்​டி​யிடு​கின்​றனர்.

அதே​போல மொத்​தம் உள்ள 5 பதவி​களுக்கு பெண் வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​களான கே.​சாந்​தகு​மாரி, வி.நளினி, டி.பிரசன்​னா, கனி​மொழி மதி, மார்​கரேட் லாரன்​ஸ், லூசி​யால் ரமேஷ், ஷோபா, கஜலெட்​சுமி, ஷசிலி மற்​றும் இளம் வழக்​கறிஞர்​களான அர்ச்​ச​னா, ஆர்​.எஸ்​.இந்​தி​ரா, எல்​.சும​தி, விஜயலட்​சுமி துரைக்​கண்​ணன், ஹரி​தா, ஷீலா உள்​ளிட்ட பலர் போட்​டி​யிடு​கின்​றனர். தரு​மபுரி ஜி.ரேவதி (25) இளவயது வேட்​பாள​ராகப் போட்​டி​யிடு​கிறார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மிஞ்​சும் வகை​யில் தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் சூறாவளி சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள வேட்​பாளர்​கள், வாக்​காளர்​களுக்கு பல்​வேறு கவர்ச்​சிகர​மான வாக்​குறு​தி​களை அள்ளி வீசி வாக்​கு​களை சேகரித்​து வரு​கின்​றனர்​. இதனால்​ வழக்​கறிஞர்​கள்​ மத்​தி​யில்​ தேர்​தல்​ களம்​ சூடு​பிடித்​துள்​ளது.

SCROLL FOR NEXT