தமிழகம்

குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியீடு

செய்திப்பிரிவு

குவைத்/கள்ளக்குறிச்சி: குவைத்தில் அடைத்து வைக்​கப்​பட்டு சித்​ர​வதைக்கு ஆளான தமிழக பெண் மீட்​கப்​பட்​டார். இந்​திய தூதரகத்​தில் தான் பாது​காப்​பாக இருப்​ப​தாக அவர் வீடியோ வெளி​யிட்​டுள்​ளார்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் வனிதா (35). கணவரை பிரிந்து வாழும் இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்​ளனர். குடும்ப வறுமை காரணமாக இவர் வீட்டு பணிப்​பெண் வேலைக்காக ஏஜென்ட் ஒரு​வர் மூலம் குவைத் நாட்​டுக்கு கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு சென்​றார்.

இந்​நிலை​யில், தான் வேலை பார்க்​கும் வீட்​டில் சிறிய அறை​யில் அடைத்து வைத்து சித்​ர​வதை செய்​வ​தாக​வும், 2 மாதங்​களாக சம்பளம் வழங்​க​வில்லை எனவும் கூறி வனிதா உருக்​க​மான வீடியோ ஒன்றை வெளி​யிட்​டார். வீடியோ​வில் இரு கைகளை கூப்பியபடி கண்​ணீருடன் பேசிய வனி​தா,”என் பெயர் வனி​தா. நான் கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவள். இங்கு வந்து மூன்று மாதங்​கள் ஆகின்​றன.

என்​னைச் சித்​ர​வதை செய்கிறார்கள். இரண்டு மாத​மாகச் சம்பளமும் தர வில்​லை. கள்​ளக்​குறிச்சி மாவட்ட கலெக்​டர் மற்றும் காவல் கண்​காணிப்​பாளர் தான் என்னை மீட்​டு, என் தாய்​நா​டான இந்​தி​யா​விற்​குத் திரும்ப அழைத்​துச் செல்ல வேண்​டும்” என கோரிக்கைவிடுத்தார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்​து, வனி​தா​வின் தாய் வெண்​ணிலா கள்​ளக்​குறிச்சி மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளரிடம் புகார் மனு அளித்​தார். ஏஜென்ட் தனது மகளை ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், அவரை உயிருடன் மீட்​டுத் தரும்​படி​யும் வெண்​ணிலா கோரிக்கை விடுத்​தார்.

இதையடுத்​து, கள்​ளக்​குறிச்சி மாவட்​டக் காவல் துறை இது குறித்து, மத்​திய வெளி​யுறவுத்​துறை மற்​றும் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரி​வித்​து, வனி​தாவை பத்​திர​மாக மீட்ப​தற்​கான முயற்சிகளை தீவிரப்​படுத்​தி​யது.

இதற்​கிடை​யில், வனி​தா​வின் வீடியோ குவைத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தின் கவனத்​துக்கு சென்​றது. அதனை தொடர்ந்து தூதரக அதி​காரி​கள் வனி​தா​வின் இருப்​பிடத்தை கண்​டறிந்து அவரை மீட்​டனர். தற்​போது அவர் இந்​திய தூதரகத்​தில் பாது​காப்​பாக உள்​ளார். இது தொடர்​பாக இந்​திய தூதரகத்​துக்கு நன்றி தெரி​வித்து வனிதா புதிய வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

வீடியோ​வில், பச்சை நிற குர்தா அணிந்​து, கைகளை கூப்பி மகிழ்ச்​சி​யுடன் பேசிய வனிதா “என்னை மீட்க இந்​தி​யத் தூதரகத்தின் உதவியை நாடினேன். இப்​போது நான் இந்​தி​யத் தூதரகத்​தில் பாது​காப்​​பாக இருக்​கிறேன்​. இந்​தி​யத்​ தூதரகத்​திற்​கு நன்​றி. இப்​போது எனக்​கு நல்​ல உடை​யும்​ நல்​ல உணவும்​ கிடைக்கிறது” என தெரி​வித்​​தார்​.

SCROLL FOR NEXT