தமிழகம்

தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் மரபு மிக​வும் வளமானது, மிக​வும் பழமை​யானது என்​றும் தமிழகத்​தில் மிகச்​சிறந்த மனிதவளம் இருப்​ப​தாக​வும் குடியரசு தின உரை​யில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

நாட்​டின் 77-வது குடியரசு தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தனது குடியரசு தின உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: புதிய பாரதத்​தின் எழுச்​சியை ஒட்​டுமொத்த உலக​மும் பார்த்​துக் கொண்​டிருக்​கிறது. நாம் விரை​வில் உலகின் மூன்​றாவது பெரிய பொருளா​தா​ர​மாக மாற உள்​ளோம்.

          

கடந்த 10 ஆண்​டு​களில், 25 கோடிக்​கும் மேற்​பட்ட குடிமக்​கள் முழு​மை​யான வறுமையி​லிருந்து மீண்டு வந்​துள்​ளனர். உலகின் முதல் 3 புத்​தொழில் சூழல் அமைப்​பு​களில் ஒன்​றாக பாரதம் உருப்​பெற்​றுள்​ளது. அறி​வியல், தொழில்​நுட்​பத்​தில் உலகின் முன்​னணி நாடு​களில் ஒன்​றாக இந்​தியா உள்​ளது. பாது​காப்​புத் துறை​யில், இந்​தி​யா​வின் உள்​நாட்டு பாது​காப்​புத் திறன்​களின் தொழில்​நுட்ப மேன்​மையை ஆபரேஷன் சிந்​தூர் நிரூபித்​தது.

செயற்கை நுண்​ணறி​வு, மேம்​பட்ட ரோபாட்​டிக்​ஸ், குவாண்​டம்கம்ப்​யூட்​டிங், நானோ தொழில்​நுட்​பம் போன்ற புது​யுகத்தொழில் நுட்​பங்​களின் களத்​தில், சிறந்து விளங்​கும் சில நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​று. புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி​யில், இந்​தியா முன்​னணிநாடாகத் திகழ்​கிறது. கடந்த டிசம்​பர் மாதத்​தில் மட்​டும், ஏறத்​தாழ ரூ.28 லட்​சம் கோடி மதிப்​புள்ள 21.6 பில்​லியன் பரிவர்த்​தனை​களை யுபிஐ செயல்​படுத்​தி​யுள்​ளது. இந்த அளவு இந்​தி​யா​வின் டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை உள்​கட்​டமைப்​பின் வலிமை​யைக் காட்​டு​கிறது.

நமது தமிழ் மரபு பற்றி பாரத தேசத்​தவர் ஒவ்​வொரு​வரும் பெருமை கொள்​கிறார்​கள். தமிழ்மரபு மிக​வும் வளமானது, மிக​வும்பழமை​யானது, சோழர்​களின் பெரு​மைமிகுந்த பாரம்​பரி​யம் தேசம் முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. ராஜேந்​திர சோழனின் ஆயிர​மாவது ஆண்டு விழா வரலாற்​றுச் சிறப்​புமிக்க கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் பிர​மாண்​ட​மான விழா​வாகக் கொண்​டாடப்​பட்​டது. இதில், தமிழ்ப் பாரம்​பரி​யம் மீது மிகுந்த பற்று கொண்ட பிரதமர் பங்​கேற்​று, ராஜ ராஜ சோழனுக்​கும் ராஜேந்​திர சோழனுக்​கும் சிலைகள் நிறு​வப்​படும் என்ற அறி​வித்​தார்.

காசி-தமிழ்ச் சங்​கமம் காசி-தமிழ்ச் சங்​கமம் மூலம் தமிழகத்​துக்​கும் காசிக்​கும் இடையி​லான ஆழமான, பழமை​யானதொடர்பை கொண்​டாடினோம்.இரு பகு​தி​களை​யும் இணைக்​கும் ஆயிரக்​கணக்​கான ஆண்டு காலப் பழமை​யான கலாச்​சார மற்​றும் ஆன்​மிக தொடர்ச்​சியைப்புதுப்​பித்​தோம். மொழிகளும் கலாச்​சா​ர​மும் மக்​களை ஒன்​றிணைக்​கின்​றன. புரிதலை​யும் நல்​லிணக்​கத்​தை​யும் வளர்க்​கின்​றன.

வந்தே மாதரம் பாடல் தமிழக மக்​களின் இதயங்​களில் நீண்ட கால​மாக சிறப்​பான இடத்​தைப் பிடித்​துள்​ளது. தேசபக்​தி, ஒற்​றுமை பற்​றிய செய்​தி​களின் மூலம் இந்​தப் பாடல் பல தலை​முறை​களை ஊக்​குவிக்​கிறது. இளைஞர்​களின் ஆற்​றலும் முன்​முயற்​சி​யும் நாட்​டின் எதிர்​காலத்தை மாற்​றியமைக்​கின்​றன. இளம் கண்​டு​பிடிப்​பாளர்​களும், படைப்​பாளி​களும் தங்​களின் சிந்​தனை​களை செயல்​வடிவ​மாக மாற்​றுகிறார்​கள். ஒவ்​வொரு துறை​யிலும் முன்​னேற்​றத்தை ஏற்​படுத்​துகிறார்​கள்.

தமிழகத்​தில் மிகச்​சிறந்த மனிதவளம் இருக்​கிறது. இளைஞர்​கள், பெண்​கள், விவ​சா​யிகள், மீனவர்​கள், நெச​வாளர்​கள்,கைவினைஞர்​கள் என சமூகத்​தின் அனைத்​துப் பிரி​வினரும் ‘தேசத்​துக்கே முதன்​மை’ என்ற உறு​தி​மொழிக்கு தங்​களை அர்ப்​பணித்​துக் கொள்ள வேண்​டும். சுய​சார்​புள்ள, வளர்ந்த பாரதத்​தை 2047-ம்​ ஆண்​டுக்​குள்​ உரு​வாக்​கு​வோம்​. இவ்​வாறு அவர்​ பேசினார்​.

SCROLL FOR NEXT