கொலையான மூவர்

 
தமிழகம்

“கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” - பெ.சண்முகம்

வெற்றி மயிலோன்

சென்னை: “தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 3 விவசாயிகளை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கு தமிழக அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

விசா​ரணைக்கு உத்​தரவு

இதற்கிடையே, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் கூறுகை​யில், “இந்த தாக்​குதலில் 3 பேர் உயி​ரிழந்​திருக்​கின்​றனர். காயமடைந்த ஒரு​வர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். 3 பேரின் உடல்​களும் மைசூரு கே.ஆர்​.மருத்​து​வ​மனைக்கு பிரேத பரிசோதனைக்​காக கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது.

அவர்​கள் நடத்​திய தாக்​குதலில் வனத்​துறையை சேர்ந்த ஒரு​வர் காயமடைந்​திருக்​கிறார். கொல்​லப்​பட்​ட​வர்​களிடம் இருந்து 2 நாட்டு துப்​பாக்​கி​கள், மான் இறைச்சி ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு சாம்​ராஜ்நகர் மாவட்ட அதி​காரி​களுக்​கு உத்​தர​விட்​டுள்​ளேன்​” என்​றார்​.

‘மாடு மேய்க்க சென்றார்கள்’

கொள்ளேகாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்க சென்றவர்கள். இரவில் வனப்பகுதியிலே தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சு பகுதியில் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.

உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

போலீஸார் குவிப்பு

இந்த சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​ட​தால் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT