தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்த நிகழ்நேரப் பதிவின் தொகுப்பு இது...
4 முனைப் போட்டி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப் போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணிக்கு தான் வெற்றி என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, தவெக 106, அதிமுக 62, திமுக 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டியில் உள்ளன.
தமிழக முன்னிலை நிலவரம்: தற்போதைய நிலவரப்படி தவெக: 102, திமுக: 75, அதிமுக: 57,தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக 2-ம் இடத்துக்கு கடும் போட்டாபோட்டியில் இருக்கின்றன.
கொளத்தூர் ஷாக்! அதில் உச்சபட்சமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரைப் போலவே சீனியர் அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார் வேட்பாளர்களில் முன்னிலை யார் யார்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்து பார்ப்போம். திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகிக்கிறார், எடப்பாடி தொகுதியில் பழனிசாமியும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், கோவை தெற்கில் செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக: 188, திரிணமூல் காங்கிரஸ்: 92, இடதுசாரிகள்: 1 என முன்னிலை வகிக்கின்றன.
கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 51, யுடிஎஃப் கூட்டணி: 84, என்டிஏ கூட்டணி: 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 79 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 24, பிற கட்சிகள்: 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி முன்னிலை நிலவரம்: 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில், தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
எடப்பாடி முதல் உதயநிதி வரை: முன்னிலை நிலவரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்து பார்ப்போம். திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகிக்கிறார், எடப்பாடி தொகுதியில் பழனிசாமியும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், கோவை தெற்கில் செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திமுக கூட்டணி வெற்றி நிலவரம்: இதுவரை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் P.விஸ்வநாதன், கூடலூரில் திமுக வேட்பாளர் திராவிட மணி, குன்னூரில் எம்.ராஜூ, வால்பாறையில் குட்டி என்ற சுதாகர், உடுமலைப்பேட்டையில் ஜெயக்குமார் ஆகியோர் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி வெற்றி நிலவரம்: அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, விராலிமலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி
புதுச்சேரியில் போட்டியிட்ட நடப்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரும் தோல்வியடைந்தனர். புதுச்சேரியில் கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 2 எம்எல்ஏக்களாக சுருங்கினர். லாஸ்பேட்டையில் வைத்தியநாதனும், மாஹேயில் ரமேஷ் பரம்பத்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இம்முறை காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு தந்தது. ஆனால் இருவரும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தனர்.
மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக: 195, திரிணமூல் காங்கிரஸ்: 89, இடதுசாரிகள்: 1 என முன்னிலை வகிக்கின்றன.
கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 35, யுடிஎஃப் கூட்டணி: 98, என்டிஏ கூட்டணி: 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 90 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி முன்னிலை நிலவரம்: 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில், தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
தவெக நிலவரம் @ புதுச்சேரி: புதுச்சேரியில் தவெகவும், அக்கட்சியின் கூட்டணியான நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். புதுச்சேரியில் தவெக 28 தொகுதிகளிலும் அக்கட்சி கூட்டணி அமைத்த நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டனர். புதுச்சேரியில் தவெக பல தொகுதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் மணவெளி தொகுதியில் தவெக வேட்பாளர் ராமு
2026 சட்டப்பேரவைத் தேர்தல் விசித்திரமான பல மக்கள் தீர்ப்புகளை எழுதியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ஆளும் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி கண்டது அக்கட்சிக்கும், ஸ்டாலினுக்கு தனிப்பட்டை வகையிலும் பெரிய பின்னடைவு.
அதேவேளையில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளும் அரங்கேறியுள்ளன.
மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி முகம் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக: 199, திரிணமூல் காங்கிரஸ்: 88, இடதுசாரிகள்: 1, காங்கிரஸ் - 1, என முன்னிலை வகிக்கின்றன.
கேரளாவில் ஆட்சியை இழக்கும் எல்டிஎஃப்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 35, யுடிஎஃப் கூட்டணி: 97, என்டிஏ கூட்டணி: 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் ஹேட்ரிக் வெற்றி அடிக்கும் என்டிஏ: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் என்டிஏ: 91 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி ராஜ் பவன் சுவாரஸ்யம்: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திமுக வேட்பாளராக விக்னேஷ் கண்ணன் போட்டியிட்டார். இத்தொகுதியில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரும் களம் இறங்கினார். இந்நிலையில் 287 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றது.
அதேபோல், லாட்டரி அதிபர் மார்டின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகரில் 10205 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
தவெக வேட்பாளர்கள் வெற்றி விவரம்: > தி.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பொதுச்செயலாளர் ஆனந்த் வெற்றி
> கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
> ராயபுரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய் தாமு வெற்றி
> மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா வெற்றி
> அண்ணாநகர் தொகுதி தவெக வேட்பாளர் வி.கே.ராம்குமார் வெற்றி
> மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் வெற்றி
> சேந்தமங்கலம் தொகுதி தவெக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி
> தஞ்சாவூர் தொகுதி தவெக வேட்பாளர் விஜய சரவணன் வெற்றி
> அறந்தாங்கி தொகுதி தவெக வேட்பாளர் பர்வேஸ் வெற்றி
அதேபோல் புதுச்சேரியிலும் தவெக தனது கணக்கை தொடங்கியுள்ளது. தவெகவும், அக்கட்சியின் கூட்டணியான நேயம் மக்கள் கழக வேட்பாளர்களும் தலா ஒரு தொகுதிகளில் வென்றனர்.
புதுச்சேரியில் தவெக 28 தொகுதிகளிலும் அக்கட்சி கூட்டணி அமைத்த நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இதில் மணவெளி தொகுதியில் தவெக வேட்பாளர் ராமு 13822 வாக்குகள் பெற்று வென்றார். உருளையன்பேட்டையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு வெற்றி பெற்றார்.
புதுச்சேரியில் தவெக பல தொகுதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் 4 முனைப் போட்டி என்று சொல்லப்பட்ட நிலையில், நாதக களத்தில் மட்டுமே இருந்தது; மற்றபடி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காரைக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில் அங்கே தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு வெற்றி பெற்றிருக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி: “ விஜய், தான் முதல்வர் ஆக வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அதற்கான களப்பணிகளையும் ஆற்றினார். என்னை விட என் மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறார்.
விஜய் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார். வெற்றி நமதே என்ற மந்திரமே விஜய்யின் தாரக மந்திரமாக இருந்தது. விஜய்யை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். ஒரு அப்பாவாக ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
இதைவிட என்ன வேண்டும்? எவ்வளவோ எதிர்ப்புகளை, சோதனைகளை தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண வெற்றி இல்லை. யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று வெற்றி பெற்றதே பெரிய விசியம்” என்று தவெக வெற்றி குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தோடு மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது, அசாமிலும் என்டிஏ கூட்டணி ஆட்சி தொடர்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஹாட்ரிக் ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதியுள்ளது. கேரளத்தில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணியை தோற்கடித்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 76, அதிமுக கூட்டணி 50 தொகுதிகளை வசப்படுத்துகின்றன. திமுக 2-ம் இடத்தில் உள்ளது. முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் கொளாத்தூரில் தோல்வியை சந்தித்தது துரதிர்ஷ்டவசமானது.
அதுமட்டுமல்லாது திமுகவின் கோட்டை எனப்படும் சென்னை அதன் அனைத்து தொகுதிகளையும் தவெகவிடம் இழந்திருக்கிறது. அதேபோல் தெற்கு, மேற்கு, வடக்கு, டெல்டா என அனைத்து மண்டலங்களிலும் தவெக கோலோச்சியிருக்கிறது.
இந்த நிலையில் “ஊழலற்ற நேர்மையான அரசியல் மாற்றத்தை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை கொண்டு செயல்படுத்துவார் என்ற விருப்பத்தில் தமிழக இளைஞர்களும், மக்களும் வாக்களித்திருக்கிறார்கள்” என்ற விமர்சனங்கள் பொது வெளியில் உருவாகியுள்ளன.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றார்.
அவர் மட்டுமல்லாது தவெகவின் அறியப்பட்ட முகங்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், ராஜ் மோகன் எனப் பலரும் வாகை சூடினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பேரதிர்ச்சியையும், அதிமுகவுக்கும் சற்றும் குறைவில்லாத அதிர்ச்சியையும் கடத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் தவெக தடம் பதித்துள்ளது. அதுவும் அதன் கூட்டணிக் கட்சியும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன.
விஜய் அரசியல் மேடைகளில் விசில் புரட்சியை ஏற்படுத்துங்கள் என்று கோரியதுபோலவே இப்போது தமிழகமெங்கும் பரவலாக தவெக வெற்றி பெற்றிருக்கிறது. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்திருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கும் மெஜாரிட்டியை பெறாததால் தனது முதல் சவாலை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இவ்வாறு இன்னமும் பரபரப்புகள் மிச்சம் மீதி இருப்பதுபோல் இருக்க மேற்கு வங்கம் பாஜகவை வரவேற்றுள்ளது. மூன்று முறை ஆட்சி செய்த மம்தா பானர்ஜி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
கேரளாவிலும் ஆளும் எல்டிஎஃப் விடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆட்சியைப் பிடிக்கிறது. அசாமில் என்டிஏ கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது.
திமுக, அதிமுக கூட்டணி நிலவரம்: இந்த சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும் கூட 2-வது இடத்தை திமுக தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆறுதல்.
அந்த வகையில், “திமுக இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக இருந்ததுபோல், இனி சிறப்பான எதிர்க்கட்சியாக இருக்கும்,” என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் அதிமுக தனித்து 34 இடங்களில் வெற்றி பெற்றதோடு 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தும் கூட ஓரிடத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. அதே கதைதான் அமமுகவுக்கும். பாமக 2 இடங்களில் வெற்றி 2 இடங்களில் முன்னிலை என்றிருக்கிறது.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, ஆற்காடு தொகுதியில் எஸ்.எம்.சுகுமார், பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகன், ஏற்காடு தொகுதியில் உஷாராணி, ஓமலூர் தொகுதியில் ஆர்.மணி, நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், நெய்வேலி தொகுதியில் ஆர்.ராஜேந்திரன், சங்கரன்கோவில் தொகுதியில் டாக்டர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் அங்கேயும் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ என அதிர்ச்சித் தோல்விக் கணக்குகள் இல்லாமல் இல்லை.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை பொறுத்தவரை தருமபுரியில் சவுமியா அன்புமணி, ஜெயங்கொண்டம் தொகுதியில் ஜி.வைத்திலிங்கம் வெற்றி பெற்றனர்.