தமிழகம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி​ தீவிரம்: டி.ஆர்.பாலு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பரந்தூர் விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான நிலம் கையகப்​படுத்​தப்​படும் பணி​கள் விரை​வில் நிறைவு​பெறும் என்று திமுக எம்​.பி. டி.ஆர்​.​பாலு தெரி​வித்​தார்.

சென்னை விமான நிலைய அபி​விருத்தி குறித்த ஆய்​வுக் கூட்​டம் மீனம்​பாக்​கத்​தில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு விமான நிலைய ஆலோ​சனைக் குழுத் தலை​வர் டி.ஆர்​.​பாலு எம்​.பி. தலைமை வகித்​தார்.

இதில் சென்னை விமான நிலைய இயக்​குநர் ராஜா கிஷோர், எம்​எல்​ஏக்​கள் எஸ்​.ஆர்​.​ராஜா, இ.கருணாநிதி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் விமான நிலை​யத்​தில் பயணி​கள் போக்​கு​வரத்​து, சரக்​கு​கள் கையாள்​வது குறித்​தும், அதன் தரத்தை மேம்​படுத்​து​வது தொடர்​பாக​வும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அதன்​பின் டி.ஆர்​.​பாலு எம்​.பி. செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​களுக்கு நிறைய வசதி​கள் செய்து தரப்​பட்​டுள்​ளன.

இந்​தி​யா​வில் பல்​வேறு விமான நிலை​யங்​களில் இல்​லாத வசதி​யாக, இங்கு மாநகரப் பேருந்​துகள் விமான நிலை​யம் உள்ளே வந்து பயணி​களை ஏற்றி செல்​வதற்​கான வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. சென்னை மீனம்​பாக்​கம் விமான நிலை​யத்​தில் இருந்து கிளாம்​பாக்​கம் வரை மெட்ரோ ரயில் வரவுள்​ளது.

அதற்​கான பணி​களை தமிழக அரசு வேக​மாக செய்து வரு​கிறது. பரந்தூர் விமான நிலை​யம் அமைக்க மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது. அந்த விமான நிலை​யம் வந்​தால் சென்​னை​யில் வாகன நெரிசல் தவிர்க்​கப்​படும்.

பரந்தூர் விமான நிலை​யம் அமைக்க 5,700 ஏக்​கர் நிலம் தேவைப்​படு​கிறது. அதில் 2,000 ஏக்​கர் அரசுக்கு சொந்​த​மானது. 3,700 ஏக்​கர் தனி​யாருக்கு சொந்​த​மானது. அதில் 1,300 ஏக்​கர் நிலம் வாங்​கப்​பட்​டுள்​ளது.

மீத​முள்ள நிலத்தை வாங்​கக் கூடிய பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மிக விரை​வில் திட்​டத்​துக்​கான நிலம் கையகப்​படுத்​தப்​படும். அதன்​பின் பணி​கள் தொடங்​கப்​படும். பயணி​கள் கோரிக்​கையை ஏற்று சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் உட்​பகு​தி​யில், ப்ரீபெய்ட் டாக்ஸி புக்​கிங் கவுன்ட்​டர் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது என்றார்.

SCROLL FOR NEXT