தமிழகம்

திமுக கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையாக உழைப்போம்: தா.மோ.அன்பரசன் பேச்சு

செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரி: மத​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி வேட்​பாளர்​கள் அறி​முக கூட்​டத்​தில் கடுமை​யாக உழைப்​போம், ஒற்​றுமை​யாக உழைப்​போம் என அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் வேண்​டு​கோள் விடுத்​தார்.

காஞ்​சிபுரம் வடக்கு மாவட்​டத்​தில் உள்ள 6 தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் அறி​முக கூட்​டம், மாவட்ட செயல் வீரர்​கள் கூட்​டம் கூடு​வாஞ்​சேரி​யில் நேற்று முன் தினம் நடை​பெற்​றது.

          

காஞ்​சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் தா.மோ.அன்​பரசன் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மண்டல தேர்​தல் பொறுப்​பாளர் ஆ.ராசா கலந்​து​கொண்டு ஆலந்​தூர் வேட்​பாளர் தா.மோ.அன்​பரசன், செங்​கல்​பட்டு வேட்​பாளர் எம்​.கே.டி.​கார்த்​திக் தண்​ட​பாணி, ஸ்ரீபெரும்​புதூர் காங்​கிரஸ் வேட்​பாளர் செல்​வப்​பெருந்​தகை, பல்​லா​வரம் தே.​மு.​தி.க வேட்​பாளர் அனகை முரு​கேசன், தாம்​பரம் திமுக வேட்​பாளர் ஆர்​.எஸ்​.கிருத்​தி​காதே​வி, திருப்​போரூர் வி.சி.க வேட்​பாளர் பன்​னீர்​தாஸ் ஆகியோரை அறி​முகம் செய்​து​வைத்து பேசி​னார்.

அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் பேசி​யது: தமிழகம் சமச்​சீ​ரான வளர்ச்​சியை அடைந்​துள்​ளது, 50 ஆண்​டு​களில் செய்ய வேண்​டிய சாதனை​களை 5 ஆண்​டு​களில் செய்த அரசாக திரா​விட மாடல் அரசு திகழ்​கிறது.

கடந்த தேர்​தலில் கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்றி அந்த திட்​டங்​களை மக்​களிடம் சேர்த்​தவர் நமது தலை​வர் என்​றும், 1974-ம் ஆண்டு 184 இடங்​களில் வெற்றி பெற்​றோம்.

75 ஆயிரம் வாக்​கு​கள்..

அது​போல வரும் தேர்​தலில் அதை மிஞ்​சக்​கூடிய வெற்றி அமைய​வேண்​டும். வரும் 20 நாள் கடுமை​யாக உழைக்​கவேண்​டும், ஆகை​யால் கடுமை​யாக உழைப்​போம், ஒற்​றுமை​யாக உழைப்​போம் ஒவ்​வொரு தொகு​தி​யிலும் 75 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற அதற்​கான பணி​களை செய்ய வேண்​டும் என்று தா.மோ.அன்​பரசன்​ அறி​வுறுத்​தி​னார்​.

SCROLL FOR NEXT