தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் அமையும்: கே.பாலகிருஷ்ணன் கருத்து

தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் அமையும்: கே.பாலகிருஷ்ணன் கருத்து
Updated on
1 min read

செங்கல்பட்டு: ​மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் செங்​கல்​பட்டு மாவட்ட குழு சார்​பில் நேற்று முன் தினம் நடை​பெற்ற நிதி அளிப்பு மற்​றும் அரசி​யல் விளக்​க கூட்​டத்​தில் கட்​சி​யின் அரசி​யல் தலைமை குழு உறுப்​பினர் கே.பால​கிருஷ்ணன் பேசி​ய​தாவது: பழனி​சாமி அவர்​களே நீங்​கள் ஆட்​சிக்கு வந்து செய்த சாதனை என்ன நீங்​கள் அந்தகட்​சி​யின் தலை​வ​ராக வந்த பின்​னர் உங்​களு​டைய சாதனை என்​னவென்று விளக்க முடி​யு​மா? தமிழகத்​தில் தொடர்ந்து தோல்​வியை சந்​தித்​தது தான் பழனி​சாமி​யின் சாதனை.

பாஜக​வுடன் கூட்​டணி அமைத்து ஆட்சி அமைத்​தால் உங்​களால் சுதந்​திர​மாக சுமுக​மாக தமிழகத்தை ஆள முடி​யு​மா. கொள்கை ரீதி​யான முடிவு​களை எடுக்க முடி​யுமா.

தேர்​தலில் அதிமுக கூட்​டணி வெற்றி பெற்​றால் பாஜக​வின் ஆட்​சியை தமிழகத்​தில் கொண்டு வரு​வது தான் நடக்​குமே தவிர அதி​முக ஆட்​சி​யாக அது இருக்​காது.

அதி​முக தேர்​தலில் வெற்றி பெறப் போவது இல்லை என்​பது உண்​மை. அப்​படியே வெற்றி பெற்​றாலும் பாஜக​வின் நிர்ப்​பந்​தத்​துக்கு அடிமை ஆட்​சி​யாக தான் இருக்க முடி​யும். எய்ம்ஸ் மருத்​து​வ​மனைக்கு அடிக்​கல் நாட்​டி​னார்​கள் இன்று வரை கட்டி முடிக்​கப்​பட்​டதா. தமிழ்​நாட்​டில் ரயில்வே திட்​டங்​களை கேட்​டீர்​கள் கொடுத்​தார்​களா.

தமிழ்​நாட்​டுக்கு கொடுக்க வேண்​டிய நிதியை கூட மத்​திய அரசு கொடுக்​க​வில்லை திமுக ஆட்​சி​யில் கொடுக்​க​வில்லை என்​பது வேறு விஷ​யம் உங்​கள் ஆட்​சியி​லா​வது கொடுத்​தார்​களா. நாட்​டின் முக்​கிய​மான துறை கல்​வித்​துறை இதன் அதி​காரங்​களை மத்​திய அரசு எடுத்​துக் கொண்​டது.

ஒரு பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தரை நியமிக்க வேண்​டும் என்​றாலும் பல்​கலைக்கழகத்​தில் ஒரு பாடத்தை மாற்ற வேண்​டும் என்​றாலும் மத்​திய அரசு தான் முடிவு எடுக்க வேண்​டும். பள்​ளிக்​கூட பாடத்தை கூட அவர்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள். இப்​படி இந்​தி​யா​வில் மாநிலங்​களே இருக்​கக் கூடாது என்ற முடி​வில் அவர்​கள் இருக்கிறார்​கள்.

தமிழகத்​தில் பாஜக, அதி​முக அணிக்கு போடும் ஒவ்​வொரு வாக்​கும் தமிழ் மக்​களுக்​கு, தமிழ்​நாட்டு நலனுக்கு எதி​ரானது. இந்த தேர்​தலிலும்​ தி​முக கூட்​ட​ணி மகத்​தான வெற்​றி பெறப்​ போகிறது என பேசி​னார்​.

தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் அமையும்: கே.பாலகிருஷ்ணன் கருத்து
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in