தமிழகம்

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 14 ட்ரோன்கள் வாயிலாக கண்காணிப்புப் பணி

செய்திப்பிரிவு

சென்னை: ரயில் பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் விதமாக, தெற்கு ரயில்​வே​யில் முதல் முறை​யாக 14 ‘ட்​ரோன்​கள்’ வாயி​லாக கண்​காணிப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

சென்​னை​யில், தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனை குழு உறுப்​பினர் ஜாபர் அலி நேற்று கூறிய​தாவது: தெற்கு ரயில்​வே​யில் சென்​னை, திருச்​சி, மதுரை, கோவை, திரு​வனந்​த​புரம் உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய ரயில் நிலை​யங்​களில் பயணி​களின் வருகை நாள்​தோறும் அதி​கரிக்​கிறது.

ரயில் பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வே பல்​வேறு பாது​காப்பு மேம்​பாட்டு பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. ஆயுத​பூஜை, தீபாவளி பண்​டிகை​களின்​போது, பயணி​கள் எண்​ணிக்கை மேலும் பல மடங்கு அதி​கரிக்​கும்.

அந்த நேரத்​தில் ரயில் நிலை​யங்​கள், ரயில்​களில் வழக்​க​மாக நடக்​கும் திருட்​டு​கள், கடத்​தல்​களை தடுக்​கும் வகை​யிலும், பயணி​கள் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யிலும், தெற்கு ரயில்​வே​யில் முதல் முறை​யாக 14 ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

ஒவ்​வொரு ட்ரோனும், ரயில் நிலை​யத்​தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவு வரை கண்​காணிக்​கும். வரும் தீபாவளி பண்​டிகைக்​கு, 40 சிறப்பு ரயில்​கள் 85-க்​கும் மேற்​பட்ட சர்​வீஸ்​களை இயக்க தெற்கு ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

இதில், சென்​னை​யில் இருந்து மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில் மற்​றும் சென்னை - கோவை வழித்​தடங்​களில் அதி​க​மான சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படும். இதற்​கான அறி​விப்​பு​களை அடுத்த மாதம் முதல் தெற்கு ரயில்வே வெளி​யிடும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT