தமிழகம்

ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஓபிசி கிரீமிலேயர் பிரி​வினர் நிர்​ண​யம் தொடர்​பான உச்ச நீதி​மன்ற தீர்ப்பை வரவேற்​ப​தாக​வும், இது அந்த மக்​களின் நீதிக்​கான போராட்​டத்​துக்கு கிடைத்த வெற்றி என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஓபிசி மக்​களின் நீதிக்​கான பல்​லாண்டு போராட்​டத்​துக்கு மாபெரும் வெற்​றி. ஓபிசி கிரீமிலேயர் பிரி​வினர் நிர்​ண​யம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை வரவேற்​கிறேன். கிரீமிலேயர் நிர்​ண​யத்​தின்​போது ஊதிய வரு​மானத்​தை​யும் தொழில் அல்​லது சொத்து மூல​மாக ஈட்​டும் வரு​மானத்​தை​யும் ஒரே தட்​டில் வைத்து பார்க்​கக் கூடாது என உச்ச நீதி​மன்​றம் கூறி​யுள்​ளது.

          

ஓபிசி மக்​களின் நியாய​மான உரிமை​கள் கிடைக்​காமல் போவ​தில் இருந்து இந்த தீர்ப்பு பாது​காக்​கிறது. குடிமைப் பணித் தேர்​வு​களுக்​கான தகுதி வரையறை தொடர்​பான உயர் நீதி​மன்​றங்​களின் தீர்ப்​பு​களை​யும் உறுதி செய்​துள்​ளது. பல்​வேறு துறை​களின் வேலை​வாய்ப்​பு​களில் ஓபிசி மக்​களுக்கு எதி​ராக இருந்த பாகு​பாட்டை நிராகரித்​திருக்​கிறது.

இட ஒதுக்​கீடு என்​பதே சமூக ரீ​தி​யாக பிற்​படுத்​தப்​பட்​ட​வர்​களுக்​கானது எனும் நோக்​கத்தை மீண்​டும் உறு​திப்​படுத்​தி​யிருக்​கிறது. எனினும், இந்த வழக்​கில் உண்​மை​யாகவே பிற்​படுத்​தப்​பட்ட ஓபிசி பிரி​வினர் பலரின் நியாய​மான உரிமையை மறுக்​கும் நிலைப்​பாட்டை என்​டிஏ அரசு எடுத்து வாதாடியது. அது மட்​டுமல்​லாமல், முன்​னேறிய வகுப்​பினருக்​கான பொருளா​தார ரீதி​யான இடபிள்​யூஎஸ் இட ஒதுக்​கீட்​டைக் கொண்டு வந்​து, இட ஒதுக்​கீட்​டுக்​கான அடிப்​படை​யாக அரசி​யலமைப்​புச் சட்​டம் வகுத்​துத் தந்த வரையறையை மீறியது.

மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான அகில இந்​தி​ய தொகுப்​பில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்​கீட்டை உறுதி செய்​தது உள்​ளிட்ட பலவற்​றி​லும் சமூக நீ​திக்​காக திமுக தொடர்ச்​சி​யாகப் போராடி வரு​கிறது. சமூக நீ​திக்​கான நம் போராட்​டம் தொடரும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT