தமிழகம்

சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை: துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமைச்​சர் துரை​முரு​க​னுக்கு எதி​ரான சொத்துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட் சிக் காலத்​தில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராகப் பதவி வகித்த அமைச்​சர் துரை​முரு​கன், வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.3.92 கோடி அளவுக்​குச் சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக துரை​ முரு​கன், அவரது மனைவி சாந்​த கு​மாரி, மகன் கதிர் ஆனந்த் எம்​.பி.

மரு​மகள் சங்​கீ​தா, அமைச்​சரின் சகோ​தா​ரர் துரை சிங்​காரம் ஆகியோ​ருக்கு எதி​ராக அதி​முக ஆட்சிகாலத்​தில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் கடந்த 2002-ம் ஆண்டு நவ.11-ம் தேதி வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

          

இந்த வழக்​கில் இருந்து அமைச்​சர் துரை​முரு​கன் உள்​ளிட்​டோரை விடு​வித்​து, வேலூர் சிறப்பு நீதிமன்​றம் கடந்த 2007-ல் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்​புத்​துறை தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், சொத்​துக் குவிப்பு வழக்​கில் துரை​முரு​கன் உள்​ளிட்​டோரை விடுவித்த உத்​தரவை ரத்​துச் செய்தது.

அவர்​கள் மீதான குற்​றச்​சாட்டு​களைப் பதிவு செய்து தின​மும் விசா​ரணை நடத்தி வழக்கை 6 மாதங்​களுக்​குள் முடிக்க வேலூர் சிறப்பு நீதி​மன்​றத்​துக்​குக் கடந்த ஆண்டு ஏப்.24-ல் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து துரை முரு​கன் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.நாகரத்​னா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு விசா​ரித்​தது.

மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன்வைத்த வாதத்தை ஏற்ற உச்ச நீதி​மன்​றம், சொத்​துக் குவிப்பு வழக்கு மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​ததுடன், பதில் அளிக்க லஞ்ச ஒழிப்​புத்​துறை பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப்​.20-ம் தேதிக்கு தள்ளிவைத்​தது.

SCROLL FOR NEXT