தமிழகம்

​மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்​முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய பாமக நிறு​வனர் ராம​தாஸுக்கு உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

மாம்​பழம் சின்​னத்தை முடக்ககோரும் பாமக நிறு​வனர் ராம​தாஸின் மனுவை மூன்று நாள்​களுக்​குள் விசா​ரித்து தீர்ப்பு அளிக்க சிவில் நீதி​மன்​றத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, பாமக நிறு​வனரின் மனுவை விசா​ரித்த சென்னை பெருநகர சிவில் நீதி​மன்​றம் மனுவை தள்​ளு​படி செய்​து, தேர்​தல் ஆணை​யத்தை நாட கடந்த 27-ம் தேதி அறி​வுறுத்​தி​யது.

          

இந்த உத்​தரவை எதிர்த்த பாமக நிறு​வனர் ராம​தாஸின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், ஜோய்​மால்​யா, பக்சி அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. பாமக நிறு​வனர் ராம​தாஸ் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, சிவில் நீதி​ மன்​றம் மாம்​பழம் சின்​னத்தை முடக்க மறுத்​து​விட்​டது, தேர்​தல் ஆணை​யத்தை நாட அறி​வுறுத்​தி​யுள்​ளது. தேர்​தல் ஆணை​யம் ராம​தாஸையோ, அன்​புமணி​யையோ பாமக​வின் தலை​வ​ராக அங்​கீகரிக்​க​வில்லை என்​பதை டெல்லி உயர் நீதி​மன்ற தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்​ளது. வேட்​பாளர்​களுக்கு சின்​னம் ஒதுக்​கு​வதற்கு முன் தீர்வு காணவேண்​டும். தேர்​தல் ஆணை​யம் நாளையே முடிவு எடுக்க வேண்​டும் என்று வாதிட்​டார்.

அன்​புமணி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜராகி, மாம்​பழம் சின்​னத்தை முடக்கி பாமகவை அழிக்க முற்​படு​கிறார். மாம்​பழம் சின்​னம் பொதுசின்​னம் இல்லை என்று சிவில் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது என்று வாதிட்​டனர். முன்​ன​தாக தலைமை நீதிப​தி,

எதிர்​மனு​தா​ர​ரான மகன் எப்​படி வெற்றி பெறக்​கூ​டாது என்று தந்தை நினைத்​தால் அதை வாக்​காளர்​களிடம் சென்று தெரிவிக்க வேண்​டும் என்​றார். நீதிபதி ஜோய்​மால்யா பக்​சி, மனு​தா​ரின் வாதம் அரசி​யல்​ரீ​தி​யான அழிவை உரு​வாக்​கும். வெற்றி பெற்​றால் மாம்​பழம் சின்​னம் கிடைக்​காமல் போகும் என்று தெரி​வித்​தார்.

இருதரப்பு வாதங்​களுக்கு பிறகு, சென்னை சிவில் நீதி​மன்​றத்​தின் உத்​தரவை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் உரிய மனுவை மனு​தா​ரர் தாக்​கல் செய்ய வேண்​டும். தேர்​தல் அவசரத்தை கருத்​தில் கொண்டு தாக்​கல் செய்​யப்​படும் மனுக்​களை சென்னை உயர் நீதி​மன்​றம் விரைந்து விசா​ரிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்டு மேல்​முறை​யீட்டு மனுவை முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT