ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், மாங்குடி

 
தமிழகம்

மாணிக்கம் தாகூர் நியமனத்தால் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆதரவாளர்கள் கடும் விரக்தி

செய்திப்பிரிவு

சிவகங்கை: தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்ததால் கார்த்தி சிதம்பரம் எம்பி ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தரப்பு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச் சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தரப்பு என இரு தரப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆனாலும், கார்த்திசிதம்பரம் தரப்பு கையே இதுவரை ஓங்கி இருந்தது. மக்களவைத் தேர்தலின் போது ஒவ்வொரு முறையும் சீட்டு கொடுக்கக் கூடாது என எதிர் தரப்பு குரல் கொடுத்தாலும், கார்த்தி சிதம்பரத்துக்கே வாய்ப்பு தரப்பட்டது. அதேபோல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் ஆரவாளரான மாங்குடிக்கே 2 முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.

ஆனால், இந்த முறை மாங்குடி தோல்வி அடைந்துவிட்டார். மேலும், தனக்கு எதிராகச் செயல்பட்ட மாவட்டத் தலைவர் சத்திய மூர்த்தியை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளரான சஞ்சய்யை மாவட்டத் தலைவராக நியமித் தார் கார்த்தி சிதம்பரம்.

அதேபோல், வட்டாரத் தலை வர்கள், நகரத் தலைவர்களும் அவரது ஆதரவாளர்களாகவே உள்ளனர். மேலும், இ.எம்.சுதர்சன நாச்சியப்பனின் உறவினரும் சிவகங்கையைச் சேர்ந்தவரு மான மாணிக்கம் தாகூர், ப.சிதம்பரம் இருக்கும்வரை சிவகங்கை மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதற்காக விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார்.

எனினும் அவர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி தரப்புக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். அவரும், கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸில் எதிரும், புதிருமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப் பேற்றுள்ளார்.

அவர் இனி சிவகங்கை மாவட்டத்திலும் அரசியல் செய்வார் என்று அவரது ஆதர வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், தங்களது பதவிக்கு சிக்கல் வந்துவிடுமோ என்று கார்த்திசிதம்பரம் ஆதரவாளர் கள் விரக்தியில் உள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸார் சிலர் கூறுகையில், மாணிக்கம் தாகூருக்கு கார்த்திசிதம்பரம் தரப்பினர் இதுவரை வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை. இதுகுறித்து மாணிக்கம் தாகூரிடம் அவரது ஆதர வாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால், அவர் சிவகங்கை நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்டத் தலைவர் சஞ்சய்க்கு செப்டம்பர் மாதத்துடன் 3 ஆண்டுகள் முடிந்துவிடும். அதன்பின்னர் புதிய மாவட்டத் தலைவர் நியமிக்க வேண்டும். இதில் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளரை நியமிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு கார்த்திசிதம்பரம் முட்டுக்கட்டை போடுவார்.

ஏற்கெனவே சத்திய மூ ர்த்தியை மாற்ற, அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி முட்டுக் கட்டை போட் டார். ஆனாலும், ப.சிதம்பரம், கார்த்திசிதம்பரம் தங்களது செல்வாக்கை வைத்து சஞ்சய்யை கொண்டு வந்தனர்.

ஏற்கெனவே காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க ப.சிதம்பரம்தான் காரணம் என கட்சியில் பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட திமுக இண்டியா கூட்டணியிலிருந்து வெளி யேறாது என்று ப.சிதம்பரம் கூறினார்.

ஆனால், மாணிக்கம் தாகூர் முழுக்க, முழுக்க தவெக ஆதரவு நிலையில் உள்ளார். இதனால், தலைமை யார் பேச்சை கேட்கும், சிவகங்கை மாவட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT