தமிழகம்

கோடை விடுமுறை விரைவு ரயில்​ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை: கோடை விடுமுறையை முன்​னிட்​டு, விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கி​யுள்​ளது. தென் மாவட்ட விரைவு ரயில்​களில் பயணி​கள் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்​கின்​றனர்.

நடப்பு கல்​வி​யாண்​டில் இறுதி தேர்​வு​கள் அடுத்த மாதத்​தில் தொடங்​கி, ஏப்​ரல் 2-வது வாரத்​தில் முடி​யும். அது​போல, கல்​லூரி மாணவர்​களின் தேர்வு முடிந்து பிறகு, கோடை விடுமுறை அறிவிக்​கப்பட உள்​ளது.

          

சென்​னை, கோவை போன்ற பெரிய நகரங்​களில் வசிப்​போர், சொந்த ஊர்​களுக்​கும், சிலர் சுற்​றுலா இடங்​களுக்​கும் செல்​வார்​கள். இந்​நிலை​யில், கோடை விடுமுறையில் ரயி​லில் வெளியூர் பயணம் செய்ய திட்​ட​மிட்​டுள்ள பொது​மக்​கள் முன்​ப​திவு செய்ய தொடங்​கி​யுள்​ளனர்.

இதுகுறித்​து,தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சொந்த ஊர், சுற்​றுலா தலங்​களுக்கு செல்ல முன்​ப​திவு செய்​கின்​றனர். விரைவு ரயில்​களில் பயணிக்க, 60 நாட்​களுக்கு முன்​பாக முன்​ப​திவு செய்​யும் வசதி இருப்​ப​தால், ஐஆர்​சிடிசி இணை​யதளம் மற்​றும் ரயில் நிலைய டிக்​கெட் கவுன்ட்​டர்​கள் மூல​மாக முன்​ப​திவு செய்​கின்​றனர்.

குறிப்​பாக, பயணி​கள் தேவை அதி​க​மாக உள்ள தென்​மாவட்ட விரைவு ரயில்​களில் பயணி​கள் ஆர்​வ​மாக முன்​ப​திவு செய்​கின்​றனர். சென்னை - திருச்​செந்​தூர், கன்​னி​யாகுமரி, நெல்​லை, தூத்​துக்​குடி, தென்​காசி, கொல்​லம் உட்பட பெரும்​பாலான விரைவு ரயில்​களில் வரும் ஏப்​.24-ம் தேதி பயணத்​துக்​கு, முன்​ப​திவு முடிந்துவிட்​டது. வந்தே பாரத் உட்பட சில ரயில்​களில் மட்​டுமே கணிச​மாக டிக்​கெட்​டு​கள் உள்​ளன.

ஒவ்​வொரு நாளும் முன்​ப​திவு தொடங்​கும் போது, பெரும்​பாலான டிக்​கெட்​டு​கள் விற்று தீர்ந்து விடு​கின்​றன. அதி​க​மாக காத்​திருப்பு பட்​டியல் உள்ள ரயில்​கள், வழித்​தடத்தை தேர்வு செய்து சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படும். இதற்​கான, அறி​விப்பு அடுத்த மாதம் இறு​தி​யில்​ அறிவிக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT