சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளர்கள்: 11.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டார். அதை கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டார். அதை கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டமன்​றத் தொகு​தி​களுக்​கான இறுதி வாக்​காளர் பட்​டியலை அங்​கீகரிக்​கப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்​சிப்பிர​தி​நி​தி​களின் முன்​னிலை​யில் மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று வெளி​யிட்​டார்.

சென்னை மாவட்​டத்​தில் 4,079 வாக்​குச்​சாவடி மையங்​கள் அமைக்​கப்​பட்​டு, அதன் அடிப்​படை​யில் இந்த இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில், 13,65,763 ஆண், 14,64,344 பெண், 829 இதரர் என மொத்​தம் 28,30,936 வாக்​காளர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

கடந்த ஆண்டு அக்​.27-ம் தேதி நில​வரத்​துடன் ஒப்​பிடும்​போது, 11,73,758 லட்​சம் வாக்​காளர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளனர். வரைவு வாக்​காளர் பட்​டியலுடன் ஒப்​பிடும்​போது, 2,51,260 வாக்​காளர்​கள் கூடு​தலாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இறுதி பட்​டியலில் 1,27,418 ஆண் வாக்​காளர்​களும், 1,43,053 பெண் வாக்​காளர்​களும், 829 இதர வாக்​காளர்​களும் புதி​தாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். சென்னை மாவட்​டத்​தில் குறைந்​த​பட்​ச​மாக துறை​முகம் தொகு​தி​யில் 1,16,896 வாக்​காளர்​களும், அதி​கபட்​ச​மாக பெரம்​பூர் தொகு​தி​யில் 2,22,792 வாக்​காளர்​களும் உள்​ளனர்.

இந்த இறுதி வாக்​காளர் பட்​டியல்​கள் மாநக​ராட்​சி​யின் மண்டல அலு​வல​கங்​களி​லும், அனைத்து வாக்​குச்​சாவடி மையங்​களி​லும், பொது​மக்​களின் பார்​வைக்​காக வைக்​கப்​படு​கிறது.

இதை பொது​மக்​கள் பார்​வை​யிட்டு தங்​களது பெயர் மற்​றும் குடும்​பத்​தா​ரின் பெயர்​கள் குறித்த விவரங்​களை சரி​பார்த்​துக் கொள்​ளலாம். அதி​கபட்​ச​மாக வேளச்​சேரி தொகு​தி​யில் 314 வாக்​குச்​சாவடி மையங்​களும், குறைந்​த​பட்​ச​மாக துறை​முகம் தொகு​தி​யில் 192 வாக்​குச்​சாவடி மையங்​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இறுதி வாக்​காளர் வெளி​யீட்டு நிகழ்​வில், கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள் க.கற்​பகம், வீ.ப.ஜெயசீலன்​, ம.பிர​தி​வி​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டார். அதை கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். | <em>படம்: எல்.சீனிவாசன்</em> |</p></div>
பாலியல் வன்கொடுமை வழக்கில் காரைக்குடி ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in