தமிழகம்

சென்னை, புறநகரில் இடி, மின்னலுடன் திடீர் மழை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் வழக்​கத்​துக்கு மாறாக நேற்று அதி​காலை​யில் இடி, மின்​னலுடன் கூடிய கனமழை பெய்​தது.

தமிழகத்​தில் மார்ச் மாத தொடக்​கத்​திலேயே வெப்​பநிலை அதி​கரித்து வந்​தது. சென்​னை, புறநகரில் கடந்த சில நாட்​களாகவே அவ்​வப்​போதும் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது. இடை​யிடையே கடும் வெயில் வாட்டி வந்​தது.

          

நேற்று முன்​தினம் பகல் நேரத்​தில் கடும் வெயில் சுட்​டெரித்​தது. பின்​னர் மாலை மற்​றும் இரவில் கடும் புழுக்​கம் நிலவியது. இதனைத் தொடர்ந்து நேற்று அதி​காலை 2 மணி​யள​வில் திடீரென சென்​னை, புறநகர் பகு​தி​களில் பலத்த காற்று வீசி​யது.

இடி, மின்னலுடன் லேசான மழை​யாக தொடங்கி பலத்த மழை பெய்​தது. மாநகரப் பகு​தி​யில் பரவலாக லேசானது முதல் மித​மான மழை பெய்​தது. புறநகர் பகு​தி​களில் மழை வெளுத்து வாங்​கியது.

வழக்​கத்​துக்கு மாறாக மார்ச் மாதம் மழை பெய்​த​தால், நேற்று காலை முதலே சென்​னை, புறநகரில் குளிர்ச்​சி​யான சூழல் நில​வியது.

நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக பள்​ளிக்​கரணை​யில் 10 செமீ, மேட​வாக்​கத்​தில் 9 செமீ, ஒக்​கி​யம் துரைப்​பாக்​கத்​தில் 7 செமீ, சோழிங்​கநல்​லூரில் 6 செமீ, நாராயணபுரம் ஏரி, கண்​ணகி நகரில் தலா 4 செமீ, நீலாங்​கரை, ஈஞ்​சம்​பாக்​கம், தாம்​பரம், அடை​யாரில் தலா 3 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT