மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், சு.வெங்கடேசன் எம்.பி.

 
தமிழகம்

கடந்த காலத்தில் நேர்மையான அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டிருந்தன: திமுக ஆட்சி மீது சு.வெங்கடேசன் விமர்சனம்

செய்திப்பிரிவு

மதுரை: கடந்த காலங்​களில் நேர்​மை​யான அதி​காரி​களுக்கு சில தடைகள் இருந்​தன, அவர்​களது கைகள் கட்​டப்​பட்​டிருந்ததாக மதுரை எம்.பி. சு.வெங்​கடேசன் கடந்த திமுக ஆட்​சியை விமர்​சித்​துள்​ளார்.

மதுரை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கக் கூட்​டரங்​கில், அனைத்து துறை சார்ந்த வளர்ச்​சித் திட்​டப் பணி​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் மற்​றும் அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதற்​கு, அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் தலைமை வகித்​தார். மதுரை எம்​.பி. சு.வெங்​கடேசன், ஆட்​சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநக​ராட்சி ஆணை​யர் கவுரவ்​கு​மார் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

பின்​னர் நடந்த ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் பேசும்​போது, ‘தமிழக முதல்​வர் விஜய், கடந்த கால ஆட்​சிகளைப் போல் அல்​லாமல் சிறப்​பான நேர்​மை​யான ஆட்​சியை நடத்த வேண்​டும் என நினைக்​கிறார். அதற்கு அதி​காரி​கள் தங்​களது ஆலோ​சனைகளை வழங்​கலாம். பல துறை​களி​லும் தமிழகம் முன்​னேற்​றம் அடை​யும் வகை​யில் ஆலோ​சனை​கள் வழங்க வேண்​டும். மதுரை மாவட்​டத்​தைப் பொருத்​தவரை, நிலத்​தடி நீர்​மட்​டம் குறைந்து வரு​கிறது. அதை பாது​காக்​க​வும், அது​போன்று சுற்​றுச்​சூழல் சார்ந்த பிரச்​சினை​களுக்​கும் ஆலோ​சனை​கள் வழங்​கலாம்’ என்​றார்.

பின்​னர், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்​கடேசன் பேசும்​போது, ‘கடந்த காலங்​களில் நேர்​மை​யான அதி​காரி​களுக்கு சில தடைகள் இருந்​தன. அவர்​களது கைகள் கட்​டப்​பட்​டிருந்​தன, கை விலங்கு போடப்​பட்​டிருந்​தன. தற்​போது அந்தச் சூழல் இல்​லை.

தமிழக முதல்​வர் விஜய் நேர்​மை​யான வெளிப்​படை​யான ஆட்​சியை நடத்த விரும்​பு​கிறார். அந்த வகை​யில் நேர்​மை​யான அதி​காரி​களுக்கு தவெக ஆட்சி ஒரு பொற்​காலம். எனவே, நேர்​மை​யான அதி​காரி​கள் திறம்பட செயல்​பட்​டு, அரசு நலத்​திட்​டங்​களை மக்​களுக்கு கொண்​டு​செல்ல வேண்​டும்’ என்​றார். திமுக ஆட்​சி​க் காலத்தின்போது முன்​னாள் முதல்வர்மு.க.ஸ்​டா​லினுடன் மிக​வும் நெருக்​க​மாக இருந்த சு.வெங்​கடேசன் தற்​போது திமுக மீது கடுமை​யாக விமர்​சித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT