தமிழகம்

மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்: திமுக வலியுறுத்தல்

தமிழினி

சென்னை: வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் வேண்டாம்; மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்பன திமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட தகவல்:

‘இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

> எஸ்ஐஆரை முழுமையாக ரத்து செய்க.

> தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து விசாரித்திடுக.

> ஜனநாயகத்துக்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு.

> இவிஎம்-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வருக.

> எஸ்ஐஆர் விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கும், தவெகவின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்.

> மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, எஸ்ஐஆர் ரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT