சீர்காழி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்.

 
தமிழகம்

ரூ.8,000 கூப்பன் திட்டம் சாத்தியமா? - சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

செய்திப்பிரிவு

தி​முக தேர்​தல் அறிக்​கை​யில் இல்​லத்​தரசிகளுக்கு ரூ.8,000-த்துக்கு கூப்​பன் வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. முதல்​வர் ஸ்டா​லின் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நேற்று முன்​தினம் பேட்​டியளித்​திருந்​தார். அதில் ‘8,000 ரூபாய்க்​கான கூப்​பன் திட்​டத்​தில் இன்​னும் மக்​களுக்கு தெளிவு கிடைக்​க​வில்​லை. அதை நடை​முறைப்​படுத்​து​வது சாத்​தி​யம் இல்லை என்று எதிர்க்​கட்​சி​யினர் ஒரு கருத்​தைச் சொல்​கி​றார்​களே?’ என்று கேட்​கப்​பட்​டது.

அதற்கு முதல்​வர் ஸ்டா​லின் அளித்த பதி​லில், ‘அந்த வாக்​குறுதி பெரிய அளவில் ‘ஹிட்’ ஆகி​விட்​டது. அதனாலேயே சிலர் அவதூறு பரப்​பு​கி​றார்​கள் என்று கருதுகிறேன். இலவச டிவி தரு​வோம் என்று கலைஞர் வாக்​குறுதி கொடுத்​த​போதும் கூட ஏகப்​பட்ட ஐயங்​களை எழுப்​பி​னார்​கள். நடை​முறைப்​படுத்​திக் காட்​டியது திமுக அரசு. அதே போல் மீண்​டும் ஆட்​சிக்கு வந்​ததும் ரூ.8,000-த்​துக்​கான கூப்​பன் திட்​டத்​தை​யும் வெற்​றிகர​மாக அமல்​படுத்தி மக்​களை ஆச்​சரி​யத்​தில் ஆழ்த்​து​வோம்’ என்று சொல்​லி​யிருந்​தார்.

          

இந்​நிலை​யில், சீர்​காழி​யில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து நேற்று நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ரூ.8,000 கூப்​பன் திட்​டம் பற்றி முதல்​வர் ஸ்டா​லின் விளக்​கிப் பேசி​னார். அவர் பேசி​ய​தாவது: பல்​வேறு மக்​கள் நலத் திட்​டங்​களை தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​துள்​ளோம். முதலில் இல்​லத்​தரசி திட்​டம். முதல் பந்தே சிக்​சர்​தான். இல்​லத்​தரசி திட்​டத்​தில் எவ்​வளவு ரூபாய்க்கு கூப்​பன் தரப்​போகி​றோம். எவ்​வளவு? எட்​டா​யிரம் ரூபாய்க்கு கூப்​பன். இந்​தக் கூப்​பனை வைத்​து, உங்​களுக்​குத் தேவைப்​படும் வீட்டு உபயோகப் பொருளை, புதி​தாக​வும் வாங்​கிக் கொள்​ளலாம்; இல்லை என்​றால், பழைய பொருளை எக்​ஸ்​சேஞ்ச் செய்து புது பொருளை​யும் வாங்​கிக் கொள்​ளலாம்.

உங்​களுக்​குப் பிடித்த கடை​யில், உங்​களுக்​குப் பிடித்த பிராண்டை வாங்​கிக் கொள்​ளலாம். என்​னென்ன பொருள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்​ஜ், டி.​வி. கிரைண்​டர், மிக்​சி, மைக்​ரோ-வேவ் அவன், மின் அடுப்பு – இதில் எதை வாங்​கலாம் என்று இப்​போதே பெண்​கள் எல்​லாம் ஆலோ​சனை செய்ய ஆரம்​பித்​து​விட்​டார்​கள். என்​னைப் பொறுத்​தவரை, நம்​முடைய குடும்​பத் தலைவி​களின் வீட்டு வேலை சுமை குறைய வேண்​டும். அதற்​காகத்​தான் இந்​தத் திட்​டம்.

இங்கு தாய்​மார்​கள் இருக்​கிறீர்​கள். ஒரு புடவை வாங்​கு​வதற்கு கடைக்​குச் செல்​கிறீர்​கள். கடைக்​குச் சென்று அந்​தப் புட​வையை வாங்​கலா​மா? வேண்​டா​மா? என்று யோசிப்​பீர்​கள். நல்ல கலரா? இது நமக்கு மேட்ச் ஆகு​மா? சாயம் போகு​மா? தண்​ணீரில் போட்​டால் சுருங்​கு​மா? அதைத் தொட்​டுப் பார்த்​து, தடவிப் பார்த்​து, இது என்ன சில்க்​கா? நைலக்​சா? காட்​ட​னா? இவ்​வள​வும் பார்த்​து​தான் வாங்​கு​வீர்​கள். ஒரு புடவை வாங்க, 250 புட​வை​களை எடுத்து கடைக்​காரர் எடுத்​துப் போடு​வார். அதை எடுத்​துக் கொண்டு வெளியே எடுத்​துச் சென்று சூரிய வெளிச்​சத்​தில் பார்ப்​பீர்​கள். எந்த வெளிச்​சத்​தில்? சூரிய வெளிச்​சத்​தில்​...

எப்​படி கருணாநிதி சொன்​னபடியே கலர் டிவி​யும், கேஸ் அடுப்​பும் கொடுத்​தா​ரோ? அவரது மகனான நானும், சொன்​னபடியே இல்​லத்​தரசி திட்​டத்தை நிறை​வேற்​று​வேன். தமி​ழ​கத்​தில் பல்​வேறு சாதனை​கள், அனை​வ​ருக்​கும் நன்​மை​களை செய்து தந்​து​விட்​டு, கம்​பீர​மாக, தெம்​புடன், திராணி​யுடன் உங்​களிடம் நான் ஆதர​வைக் கேட்​கிறேன்.

ஆனால், இப்​படி பேசுவதற்கு எந்​தக் கண்ட்​டென்​டும் இல்​லாமல், கண்​டதை​யும் பேசும் ஒரு எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக பழனி​சாமி வலம் வந்து கொண்​டிருக்​கி​றார். நாள்​தோறும் கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் எல்​லாம் வந்து கொண்​டிருக்​கிறது அல்​ல​வா... அதில், தி.​மு.க. கூட்​ட​ணி​யின் வெற்றி எண்​ணிக்கை கூட கூட, தோல்வி பயத்​தில் பழனி​சாமி​யின் தரம் கீழே கீழே இறங்​கிக் கொண்டே போகிறது.

தொகுதி மறு​வரையறை​யில் தமிழ்​நாட்​டுக்​காக குரல் கொடுக்​காத பழனி​சாமி, வேறு எதற்​காகத்​தான் பேசு​வார்? தமிழ்​நாட்​டில் தி.​மு.க. ஆட்​சி​யில் இருப்​ப​தால்​தான், தொகுதி மறு​வரையறைப் பற்​றி, பா.ஜ.க. அரசு அறி​விப்​ப​தற்கு முன்பே விழிப்​புணர்வை நாம் ஏற்​படுத்​தினோம். நடை​பெறப் போகும் தேர்​தல் டெல்லி அணிக்​கும் தமிழ்​நாடு அணிக்​கு​மான தேர்​தல். இந்த தேர்​தலில் திமுக கூட்​ட​ணியை மக்​கள் ஆதரிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT