தமிழகம்

திமுக இருக்கும்வரை தமிழகத்தை பாஜகவால் தொடமுடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘தி​முக இருக்​கும்​வரை பாஜக​வால் தமிழகத்தை தொடக்​கூட முடி​யாது’ என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

திமுக மற்​றும் கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின், திரு​வள்​ளூரில் நேற்று நடை​பெற்ற பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் வடக்கு வாசலாக இருக்​கும் திரு​வள்​ளூர் மாவட்​டம், மாநிலத்​தின் தொழில் வளர்ச்​சிக்கு எடுத்​துக்​காட்​டாக இருக்​கிறது.

          

பெரும்​பாலும் தமிழகத்​தின் கிராம தெய்​வங்​கள் வடக்கு நோக்​கி​தான் அமர்ந்​திருக்​கும். ஏனெனில் தமிழகத்​துக்கு ஆபத்து எப்​போதும் வடக்​கில் இருந்​து​தான் வரும். அப்​படி வரக்​கூடிய தேசிய ஜனநாயகக் கூட்​டணி என்ற ஆபத்தை தடுத்து நிறுத்​தக்​கூடிய தேர்​தல்​தான் தற்​போதைய தேர்​தல்.

ஓராண்​டுக்கு முன்பு இதே திரு​வள்​ளூரில் நின்​று​தான், மத்​திய பாஜக அரசை நோக்கி எத்​தனை ஏவல் அமைப்​பு​களை வேண்​டு​மா​னாலும் துணைக்கு அழைத்​துக்​கொண்டு வாருங்​கள், தமிழகம் என்​றைக்​கும் டெல்​லிக்கு ‘அவுட் ஆப் கன்ட்​ரோல்​தான்’ என்று சவால் விட்​டேன்.

அந்த சவாலில் தமிழகம் வெற்றி பெறவேண்​டும். அதற்கு திமுக கூட்​ட​ணி, சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்றி பெற்​று, திரா​விட மாடல் 2.0 ஆட்​சியை அமைத்தே ஆக வேண்​டும்.

முந்​தைய அதி​முக ஆட்​சி​யின் திறனற்ற நிர்​வாகத்​தால் பொது​மக்​கள் பல்​வேறு இன்​னல்​களைச் சந்​தித்​தனர். தனக்கு பதவி கொடுத்​தால் போதும், சம்​பந்​திக்கு ரெய்டு நடக்​காமல் இருந்​தால் போதும் என்று இருக்​கிறார் பழனி​சாமி.

இதற்​காக அவர் கொடுத்த விலை​தான் தமிழகத்​தின் உரிமை​கள். பழனி​சாமி என்ற அடிமை இருக்கும் தைரி​யத்​தில் அதி​முகவை வைத்து தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி நடத்​து​வோம், இந்​தியை திணிக்​கும் மும்​மொழித் திட்​டத்தை செயல்​படுத்​து​வோம் என, பாஜக​வினர் இஷ்டத்​துக்கு பேசிக் கொண்​டிருக்​கிறார்​கள்.

அவர்​களின் கொட்​டத்தை அடக்​கவேண்​டும். அடிமை​களை விரட்ட வேண்​டும். அதற்கு வாக்​காளர்​கள் தயா​ராக இருக்​கவேண்​டும். பழனி​சாமி ஆட்​சி​யில் தமிழகத்​தின் வளர்ச்சி 0.07 சதவீதம்​தான்.

ஆனால், இன்று தமிழகத்​தின் வளர்ச்சி 11.19 சதவீதம். இந்​தி​யா​வுக்கே ரோல் மாடல் தமிழகம் என்று தலைநிமிர்ந்து சொல்​லும் அளவுக்கு ஏராள​மான திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

ஆவடி, வீராபுரத்​தில், அரிய வகை முகச்​சிதைவு நோயால் பாதிக்​கப்​பட்ட சிறுமி டானி​யாவை என் குழந்​தை​போல் கவனித்து பெரிய அறுவை சிகிச்சை செய்​து, அவர் முகத்​தில் அழகான புன்​னகை தோன்​று​வதைக் கண்டு இன்​றைக்​கும் நான் மகிழ்ச்​சி​யடைந்து வரு​கிறேன்.

ஒவ்​வொரு செயலிலும் தமிழகத்தை முன்​னோக்கி அழைத்து கொண்டு போக வேண்​டுமென தொடர்ந்து போராடிக் கொண்​டிருக்​கிறேன். நமது மாநிலம் பலரின் கண்​களை உறுத்​துகிறது.

பெயரைக்​கூட தமிழ்​நாடு என்று கூறக்​கூ​டாது. தமிழகம் என்​று​தான் அழைக்​கவேண்​டும் என்று சொன்​னார்​கள். பெயரை மட்​டுமல்ல; நாங்​கள் நினைத்​தால் தமிழகத்​தையே இரண்​டாக உடைப்​போம் என்று பாஜக​வினர் திமி​ராகப் பேசினர். அவர்​களுக்கு சவால்​விட்டு சொல்​கிறேன்.

இந்த ஸ்டா​லின் உயிரோடு இருக்​கும்​வரை, தி​முக இருக்​கும்​வரை பாஜக​வால்​ தமிழகத்​தை தொட்​டுக்​கூட பார்க்​க முடி​யாது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT