தமிழகம்

ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம்: கிரிஷ் சோடங்கர் தகவல்

செய்திப்பிரிவு

தமி​ழ​கத்​தில் ராகுல் ​காந்​தி, ஸ்டா​லினும் ஒரே மேடை​யில் பிரச்​சா​ரம் செய்ய உள்​ளனர் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார்.

தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் நேற்று சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு ராகுல்​காந்தி மற்​றும் தெலங்​கா​னா, கர்​நாடகா முதல்​வர்​கள் வரவுள்​ளனர். தமி​ழ​கத்​தில் ராகுல்​காந்​தி​யின் தேர்​தல் பிரச்​சா​ரம் குறித்து சில தினங்​களில் அறிவிக்​கப்​படும். பிரி​யங்கா காந்​தி​யும், தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வரு​கி​றார். ராகுல்​காந்​தி, மு.க.ஸ்​டா​லின் இணைந்து தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​வார்​கள்.

          

புதுச்​சேரிக்கு ராகுல்​காந்தி வந்த போது, தமிழக முதல்​வ​ருக்கு தமி​ழ​கத்​தில் பொதுக்​கூட்​டம் இருந்​தது. அதே​நேரம் ராகுல்​காந்தி அவசர​மாக கேரள மாநில பிரச்​சா​ரத்​துக்கு செல்ல வேண்​டியதும் இருந்​தது. அதனால், புதுச்​சேரி​யில் இரு​வ​ரும் ஒன்​றாக தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்க முடிய​வில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT