கோப்புப் படம்

 
தமிழகம்

புதுச்சேரி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: தீர்வு காண ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தலில் தொகு​தி​களை பங்​கிட்​டுக்​கொள்​வ​தில் திமுக- காங்​கிரஸ் இடை​யில் இழுபறி நீடித்து வரும் நிலை​யில், பிரச்​சினைக்கு தீர்வு காண தமிழக முதல்​வர் ஸ்டா​லினை மூத்த காங்​கிரஸ் தலை​வர் ப.சிதம்​பரம் நேற்று சந்​தித்து பேசி​னார். அப்​போது புதுச்​சேரி மாநில திமுக பொறுப்​பாளர் ஜெகத்​ரட்​சக​னும் உடன் இருந்​தார்.

புதுச்​சேரி சட்​டசபை தேர்​தல் வரும் ஏப்​ரல் 9-ந் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்பு மனுத் தாக்​கல் நாளை​யுடன் முடிவடைகிறது. ஆனால் புதுச்​சேரி​யில் திமுக- காங்​கிரஸ் இடையே​யான தொகுதி பங்​கீடு இழுபறி தொடர்ந்து நீடிக்​கிறது. ‘புதுச்​சேரி​யில் கூட்​ட​ணிக்கு காங்​கிரஸ்​தான் தலை​மை. எனவே எங்​களுக்கு கூடு​தல் இடங்​கள் வேண்​டும்’ என காங்​கிரஸ் கேட்​கிறது. ஆனால் ‘தி​முக- காங்​கிரஸ் தலா 14 இடங்​களை பங்​கீட்டு கொள்​ளலாம்; இதர 2 இடங்​களை கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு கொடுக்​கலாம்’ என திமுக சொல்​கிறது.

          

இதனால் கூட்​ட​ணி​யை, தொகு​தியை இறுதி செய்ய முடி​யாத நிலை ஏற்​பட்​டிருக்​கிறது. இது தொடர்​பாக திமுக புதுச்​சேரி மாநிலப் பொறுப்​பாளர் ஜெகதரட்​சகன், புதுவை மாநில காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​கம் ஆகியோர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனாலும் காங்​கிரஸ் தமது நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லினை மூத்த காங்​கிரஸ் தலை​வர் ப.சிதம்​பரம் நேற்று சந்​தித்து பேசி​னார். அப்​போது ஜெகத்​ரட்​சக​னும் உடனிருந்​தார். முன்​ன​தாக தமிழகத்​தில் திமுக- காங்​கிரஸ் தொகுதிப் பங்​கீட்​டுப் பேச்​சு​வார்த்​தை​யில் இழுபறி நீடித்த போது ப.சிதம்​பரம் பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக​மாக முடிவுக்கு கொண்டு வந்​தார். தற்​போது புதுவை விவ​காரத்​தி​லும் ப.சிதம்​பரம் களமிறங்கி ஆலோசனை நடத்​தி​னார்.

அப்​போது பேசிய சிதம்​பரம், ‘எல்லா இடத்​தி​லும் இப்​படி பிடி​வாதம் காட்​டு​வது கூட்​ட​ணிக்கு ஆரோக்​கிய​மான​தாக இல்​லை. புதுச்​சேரி​யில் காங்​கிரஸுக்​கான இடங்​களை குறைத்​தால் காங்​கிரஸ் தொண்​டர்​களை வருத்​தமடைய செய்​யும். அது தமிழகத்​தி​லும் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடும்.

எனவே காங்​கிரஸுக்கு கூடு​தல் தொகு​தி​களை ஒதுக்​கி​னால் தொண்​டர்​களின் ஒத்​துழைப்பு பலப்​பட்டு தமிழகத்​தி​லும் புதுச்​சேரி​யிலும் நம் கூட்​ட​ணிக்கு எளி​தான வெற்றி கிடைக்​கும்’ எனச் சொன்​ன​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து காங்​கிரஸுக்கு கூடு​தல் இடங்​களைக் கொடுக்க முதல்​வர் பச்​சைக்​கொடி காட்​டி​யிருப்​ப​தாக சொல்​கிறார்​கள். இதனால் விரை​வில் தொகுதிப்பங்​கீடு இழுபறி முடிவுக்கு வரும் என புதுச்​சேரி திமுக, காங்​கிரஸ் கட்​சி​யினர் எதிர்​பார்க்​கிறார்​கள்.

டிகேஎஸ் இளங்​கோவன் நம்​பிக்கை: இதுகுறித்து பேட்​டியளித்த திமுக செய்​தித் தொடர்​புக்​குழு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன், “காங்​கிரஸ் மூத்த தலை​வர் ப.சிதம்​பரம், எங்​கள் தலை​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்து பேசி​யுள்​ளார். விரை​வில் சுமூக முடிவு எட்​டப்​படும் என்று நம்​பு​கிறோம். தொகுதி பங்​கீடு இழுபறிக்கு எண்​ணிக்​கை​தான் காரணம்.

இயல்​பாக எல்லா அரசி​யல் கட்​சிகளுக்​கும் அதிக எண்​ணிக்​கையை பெறவேண்​டும் என்ற விருப்​பம் இருக்​கும். அது தவறு கிடை​யாது. அதே​நேரத்​தில் வெற்றி வாய்ப்​பு​களை நாம் கருத்​தில் கொள்​ளவேண்​டும். நாம் மிகப்​பெரிய எதிரி​யான பாஜகவை எதிர்த்து போ​ராடு​கிறோம் என்று மனதில் கொண்டு களத்​தில்​ நிற்​க வேண்​டும்​. அதற்​கு சில முடிவு​களை எடுக்​க வேண்​டும்​” என்​றார்.

SCROLL FOR NEXT